பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையில் பிடித்துக்கொண்டு மற்ருெரு கையால் போராடத் தயாராயிருந்தான் ; இந்திரனும், கேசியும் போரிட்டார்கள். போராட்ட மும்முரத்தில் பெண்ணை விட்டுவிட்டு அசுரன் போராடினன், முடிவில் தோற்று ஓடினன். அப்பெண். தான் தேவசேனையென்றும், பிரஜாபதியின் மகளென்றும் எய்த்திய சேனை’ என்பவளின் உடன் பிறந்தாள் என்றும் இந்திரனிடம் கூறினுள். அவளுடைய சகோதரியை கேசி து.ாக்கிக்கொண்டு போய்விட்டானென்றும், அவனை அவள் காதலிக்கிருளென்றும், தேவசேன சொன்னாள். தான் கேசியைக் காதலிக்கவில்லை என்றும், தன்னைக் காப்பாற்றிய தால் தந்தை ஸ்தானத்தைப் பெற்றுவிட்ட இந்திரனே தனக்கு ஒரு கணவனைத் தேடி அளித்தல் வேண்டுமென இறைஞ்சிள்ை. தனக்குச் சகோதரி முறையான தாட்சயாய னியின் மகளானதால், தனக்கும் தேவசேன உறவினள் என்று தெரிவித்தான். அவளுக்கு மிகச்சிறந்த வீரனுெருவனைக் கணவகை அளிப்பதற்கு என்ன செய்வதென்ற சிந்தனையில் ஆழ்ந்தான். அவள் எல்லா உலகங்களிலுமுள்ள ஜீவன்களே ஆளும் மாபெரும் தெய்வத்தைத் தனக்குக் கணவனுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாள். இச்சமயம் ஒரு சகுணம் தோன்றியது. சந்திரன் சூரிய மண்டலத்தினுள் நுழைந்து விட்டது. அன்று அமாவாசை. இன்னும் பல நிமித்தங்கள் ஒரு பெரும் .இரத்தவெள்ளம் பாய்கிற பெரும் GLIrrf நடக்கப் போகிறதென்பதை இந்திரனுக்கு அறிவுறுத்தின. - இந்த நிமித்தங்களில் பிறக்கும் ஒரு தேவன், தேவசேனைக்குத் தகுந்த மணவாளனவான் என்று இந்திரன் நினைத்து பிரம்மனிடம் சென்று இம்முகூர்த்தத்தில் ஒரு தேவனைப் பிறக்கச் செய்யுமாறு வேண்டிருன். அவன் எப்படியிருத்தல் வேண்டும் என்று அவர்கள் விவாதித் தார்கள். அவன் சாதுசூரனு'யிருத்தல் வேண்டுமென்று இந்திரன் சொல்லுகிருன். சாதுசூரன் என்ருல் சுத்த வீரன் என்பது பொருள். இப்பெயரைக் கொண்டே பிற்காலத்தவர் சூரனை, ஸ்கந்தனது எதிரியான அசுரனுகக் கற்பித்து த த-8 ,惑颈