பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டியையும் வேறுபொருள்களையும் கலந்தபோது கள்ளும், அதனிடத்தே களிப்பூட்டும் புதிய பண்பும் தோன்றினும் போல ஐம்பூதங்களின் கூட்டத்தால் உணர்வு தோன்றும். து தங்களின் கூட்டம் நீங்கியபோது அவ்வுணர்வு அதிபு , உணர்வு அழிந்தால் ஐம்பூதங்களாகப் பிரியும். இது பறையின் ஒலி தூரம் செல்லச் செல்லக் குறைந்து அழிவது போல உணர்வு அழியும். உணவோடு கூட்டப்பட்ட பூதத்திலிருந்து உணர்வுள்ள பூதம் பிறக்கும். உணர் வில்லாத உடல் உணர்வில்லாத பூதங்களின் சேர்க்கையால் ண்டாகும். உயிர் உணர்வுள்ள பூதங்களால் தோன்றும், உண்மை நெறி இதுவே. இவை தவிர வேறு விதமாகவும் 2. ல க ச ட த ரி ல் பல பிரிவினர் கூறுவர். காட்சி:ே அறிவுக்குப் பிரமாணமாம். இம்மையும் இம்மைப்பவனும் இப்பிறப்பிலேயே கழிவனவாம். மதுமைப் பிறப்புண் டென்பதும், அப்பிறப்பில் இறப்பின் விண்ணப்பயனேது கர்தல் வேண்டும் என்பதும் பொய் ” (மணிமேக ைஉரைத் இவ்விளக்கம் பற்றி மணிமேகலை எதுவும் கேட்கவில்லை. அவனுடைய அறிவுத் தோற்றத்திற்குக் காட்சி (பிரததி துட்சம்) என்பதை மட்டும் மறுக்கும் வகையில், 'உனக்குத் தாயும் தந்தையுமான பெற்ருேரை எவ்வகையறிவாய்? அனுமான வளவையால் அறிவதையன்றி எவ்வாறறிவாய்? மெய்மையான பொருள் யாவும் அனுமான முதலிய அளவை களன்றி அறிதற்கரியனவாம்” (மணிமேகலை உரைத் எனவே மணிமேகலையில் பரபக்க திக்ரகம் (எதிரி கூற்றை மறுத்தல்) ஒரே ஒர் அம்சத்தில்தான் இருக்கிறது. அது அறிவளவை இயல். அதாவது நாம் அறிவு பெற ஒரே வழி காட்சி மட்டுமே எனபது உலகாயதன் கூறது எனக் கொண்டு அதனை எதிர்த்து அனுமானம் முதலிய அளவைகள் தான் மெய்யறிவைத் தருகின்றன என்று மணிமேகலை கூறுகிருள். பூதவாதி தன் கூற்றில் ஒவ்வொரு தத்துவமும் பதிலளிக்க வேண்டிய முக்கிய விஞ க்க ளு க்கும் பதிலளிக்கிருன். 241