பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலுறுப்புகளும் உண்டாகும் என்பதால் ஏற்படும் முரண்பாடுகள். கீத் மறு உலகம் இல்லே. 4) பூதங்களின் சேர்க்கையால் உணர்வும், அறிவும் தோன்றும் என்பதால் ஏற்படும் முரண்பாடுகள். இந் நான்கு தலைப்புகளில் நீலகேசி எழுப்பும் தடை களேயும், எதிர் வாதங்களேயும் காண்போம். 1) உன்னுடைய தத்துவத்தில் எவ்வாறு அடிப்படை உண்மையை அறிந்தாய்? புலன் காட்சியின் மூலமா? அனுமானத்தின் மூலமா? அல்லது சர்வக்ஞன் குத்தமற்த அறிவுடையவன். பரிபூரண அறிவுடையவன்; அறிவை வெளிப்படுத்தியதாலா? உன் சமயத்திற்கு ஸ்தாபகர் உண்டு என்று நீ ஒப்புக்கொள்ளாததால், ஒரு ஸ்தாபகரின் உரை என்ற ஆகம நூல் உனக்குக் கிடையாது. (ஜைனத்தின் ஸ்தாபகர் ரிஷபதேவர். பின்னர் காலந்தோறும் தோன்றி உண்மையை வெளிப்படுத்தியவர்கள் தீர்த்தங்கரர்கள் அவர்களது தொகை 23. கடைசித் தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர். அவர்களது நூல் ஆதியாகம்} பிரத்யட்சமே உனக்கு அறிவு அளவை அதனேயே ஆதார மாகக் கொண்டு ஐம்பூதங்களின் சேர்க்கையால் உணர்வும், மனவியல் கூறுகளும் தோன்றின என்று கூற முடியுமா? நீ உன் தாயின் கர்ப்பப்பையினுள் தோன்றியதை நேர்காட்சி மூலம் அறிந்தாயா? ஐந்து பூதங்கள் சேர்ந்து நீயாகும் பொழுது அம்மாவின் கர்ப்பப் பையில் நுழைத்து உண்ணுல் பார்க்க முடிந்ததா? இதனே அனு:மானித்து அறிந்தேன் என்று நீ சொன்னல் ஜீவனையும் (உயிர்) அவ்வாறே அனுமானித்து அறிவல்கமே. நீதான் அனுமானத்தை அளவையாகக் கொள்ளுவதில்லையே. ஆளுல் உன்னுடைய தத்துவத்தின் சில கருத்துக்களைப் பிரத்யட்சத்தால் நிறுவ முடியாதே. உடல் ஜடமாயிருப்பதைப் பார்த்து (அசேதனம் இது ஜடமான ஐம் பூதங்களின் சேர்க்கை என்று சொல்லு கிருய். அதுபோலவே சூட்சுமமான சேதனம்) உணர்வும், அறிவும் ஜீவன் என்ற சேதனத் தத்துவத்தால் தோன்தி 34?