பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யதாக ஏன் அனுமானிக்கக் கூடாது? இதே காரணத்தால் நீ ஆத்மாவை மறுக்கிருய். பரலோகத்தை மறுக்கிருய். இவற்றையெல்லாம் ஏன் அனுமானித்து அறியக்கூடாது? 2) பிரபஞ்சத்தின் அடிப்படை, பூதங்கள் என்று வாதிடுகிரும். என்ளுேடு வாதாடுகிற நீ யார்? ஐம்பூதங் களின் சேர்க்கையா? நான் ஐம்பூதங்களோட வாதாடு கிறேன்: உயிரற்த ஜடப் பொருள்களின் சேர்க்கை இப்படி என் முன்னல் தத்துவப் பொருள்கள் பற்றிப் பேசுமா? எனவே பொருள்கள் தவிர ஜீவன் தனியாக உள்ளது. அது பொருள்களினின்றும் தோன்றியதன்று. 3) ஐந்து பூதங்கள் சேருவது எப்படி? ஒன்றுற்கொன்று: முரளுன குணமுடையவை நீரும், நெருப்பும் இவையிரண்டும் சேருவதாக நீ எப்படிச் சொல்ல முடியும்? இவை சேர்ந்து உடலே எப்படி உண்டாக்க முடியும்? இவை சேர்ந்து உடல் உண்டாகும் பொழுது உபவினேவாக எப்படிச் சேதனத் தத்துவங்களான உணர்வும் அறிவும் தோன்ற முடியும்? பூதங்கள் உணர்வற்றவை (non sentient). உணர்வற்றவை களில் இருந்து உணர்வுள்ளவை (sentient) தோன்ற முடியுமா? ஜீவன் என்னும் உணரும் தத்துவத்திற்குப் பூதங்கள் உபதானக் காரணமா? நிமித்த காரணமா? (ஒரு பானையைச் செய்யக் களிமண் வேண்டும்; சக்கரம் வேண்டும். இவை உபதான காரணங்கள் செய்கிற குயவன் நிமித்த காரணம். அ ஆதலிய பொருள்களின் கலப்பால் மதுக்களி பிறப்பதைப் பற்றிக் கூறிய்ை. அதனைக் காட்சியால் காட்ட முடிகிறது. அவ்வாறே உணர்வு தோன்றுவதை பூதங்களைச் சேரவைத்துக் காட்டுவாயா? விறகில் நெருப்பு அடங்கி யிருப்பது போல பூதங்களில் உணர்வு உள்ளார்ந்து இருக்கிறது. அவற்றின் சேர்க்கையில் வெளிப்படும் என்று கூறலாம். அதிக விறகு இருந்தால் தீ அதிகமாக எரிகிறது. விறகு குறைந்தால் குறைகிறது. விறகில்லா விட்டால் அணேகிறது. இப்படித்தான் உணர்வும் என்றும் நீ கூறுவாயா? உடலின் அளவுக்கும், அறிவின் கூர்மைக்கும் 盛48