பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்பு எதுவும் இல்லையே. யானையை விட மனிதனுக்கு அறிவு சிறப்பாக இருக்கிறதே, ஜீவன் என்ற அழியாத பொருளில் இருந்தே அறிவு தோன்றுகிறது. பூதங்களி னின்றும் அல்ல. இனி ஐம்பூதங்களிலிருந்து ஐம்பொறிகளும், அவற்றி லிருந்து உணர்வும், அறிவும் தோன்றுகின்றன என்று நீ கூறுகிருய். ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு பொறியில் இருந்து தோன்றுமாளுல் ஐந்து பூதங்களின் சேர்க்கையால் உணர்வு உண்டாகிறது என்ற உன் வாக்குக்கு மாறுபட sour? 4) பூதங்களின் சேர்க்கையின் விளைவான உணர்வு, அதன் பெளதீக அடிப்படை (Physical basis) நீடிக்கும் வரை இருக்கும் என்றும், ஐம்புலன்களின் கூட்டுக் கலைந்தவுடன் மறைந்துவிடும் என்றும் கூறிஞய், மயக்கத்தால் உணர் விழந்தவன் உடலோடுதானே இருக்கிருன்? உடலோடு இருக்கும் பொழுது, ஐம்பூதங்களின் கூட்டு கலையாதபோது, உணர்வில்லாமல் இருக்கிருனே; இது எவ்வாறு? ஐம்பூதன் களைத் தவிர வேறு எதனையும் இதற்குக் காரணம் என்து நீ கூறுவாயானல் டன் அடிப்படைத் தத்துவமான பஞ்ச பூதங்களே பிரபஞ்சத்தின் அழியாத உண்மைகள் என்பது பொய்யாகிப் போய்விடும். அப்படி ஐம்பூதங்கள் தவிர ஒரு சேதன தத்துவத்தால்தான் இவ்வுணர்வு நீங்குதலை விளக்கமுடியும். இதனே ஜீவன் என்று அழைக்கலாம், மனிதன் பிறந்ததில் இருந்து சாகும்வரை தான் ஒருவனே யென்று கொள்வதும் இளமையில் நடந்ததை முதுமையில் ஞாபகத்திற்குக் கொணர்வதும், நம்முள் நிலையானதோர் பொருள் இருந்தால்தான் இயலும். அதுதான் உணர்வும் அறிவும் உடைய ஜீவன். - இம்மையில் மட்டும் இவ்வாறு ஜீவனே ஒப்புக் கொள்ளலாம் என்று நீ கூறலாம். இப் பிறப்புக்கு முன்னும் நாம் இறந்த பின்னும் ஜீவன் இருப்பதை யார் காண்பது என்று கேட்கலாம். உன்னுடைய பூதங்கள் நீ பிறக்குமுன் 露《剑