பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்ததையோ, நீ இறந்தபின் இருக்கப் போவதையோ நீ காண முடியுமா? அதுபோலவே கர்மத்தின் லிளேவை அனுபவிக்க வேண்டி ஜீவன் நிரந்தரமானது. அது செயலுக்கேற்ற கதியடையும். சமணர் சமயக் கொள்கைப் படி நான்கு கதிகள் உள்ளன: மனித கதி, நரக கதி, தேவ கதி, விலங்குகதி இவை யாவுமற்ற விடுதலை நிலை சிவகதி.). இதன் பிற்கு நடப்பதெல்லாம் தத்துல் வாதமல்ல. அவன் பேய்பிசாசு இல்லையென்கிருன், நீலகேசி உண்மையில் பேயாக இருந்து துறவியாக மாறியவன். தனது வாயை மட்டும் பேய்வாயாக்கிக் காட்டுகிருள். அவன் மயங்கி விழுந்து பேய் இருப்பதை ஒப்புக்கொண்டு சமண சமயத்தை ஏற்றுக் கொள்கிரு:ன். இவன் காட்சியைத் தவிர அனுமானத்தை ஒப்புக் கொள்வதில்லை என்பதைக் கேலி செய்யலே இந்த நிகழ்ச்சியை ஆசிரியர் புனைந்துள்ளார். இனி பூதவாதத்திற்கு நீலகேசி கூறும் தடைகளை ஆராய்வோம். மேற்கண்ட நான்கு த ைப்புகளிலேயே நம் ஆய்வை நிகழ்த்துவோம். முதலில் அறிவுக்குப் பிரமாணம் பிரத்யட்சம் மட்டுமே என்பது பூதவாதியின் அறிவளவை, காட்சி மட்டும் என்ற ஜைனர் கருத்தைக் கொண்டும், அனுமானத்தை அவன் ஒப்புக் கொள்ளவில்லை என்பதற்காக, அனுமானத்தால் மட்டும் அறியக் கூடிய உதாரணங்கள் கூறி, அதற்குமேல், தாய் வயிற்றில் பூதங்கள் சேர்ந்து சிசு உண்டாவதை அறிவது அனுமானம் என்ருல் ஜீவன், பரலோகம், மறுபிறப்பு ஆகியவற்றை ஏன் அறியக் கூடாதென்து நீலகேசி கேட்கிருள். இதற்கு பூதவாதி விடையளிக்கவில்லை என்று ஆசிரியர் கூறுகிருர், உண்மையில் பூதவாதிக்கு அனுமானம் உடன்பாடே ஆளுல் அவன் அதைப் பயன்படுத்துவதற்குரிய எல்லைகளே வகுத்திருக்கிருன். அடிப்படையில் எல்லாப் பொருள்களும் ஐம்பூதங்களின் சேர்க்கை என்று கூறும்பொழுது பொருள்களிலிருந்து பிரபஞ்சம் தோன்றுகிறது என்று கூறுகிருனே அன்றி எங்கு, எப்படிப் பொருள் சேருகிறதென்று அவன் கூறவில்லை. எனவே தாய் கருப்பையில் பூதங்கள் சேருவதை அறிய 多参鳍