பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளெல்களால் உருவானது. ஸெல் ஓர் உடலுறுப்பு. இது ஜடப்பொருளாலானது. இந்த ஜடப்பொருளில், ஒவ்வொரு செல்லிலும் கோடிக்கணக்கான அணுக்கள் கூடியிருக்கின்றன. இத்தகைய் பொருள், உணர்வுடைய பொருள், உணர்வு அதன் சலனம்-அவ்வளவு தான். இப்படிப் பூதவாதியால் பதில் சொல்ல முடிவுகள் : முடியாது. இயற்கை விஞ்ஞானம் அவனுடைய காலத்தில் இவ்வளவு வளரவில்லை. எனவே அவன் பூதங்களின் கூட்டி ஞல் உணர்வு தோன்றுகிறது என்றுதான் கூறமுடியும். பொருள்களின் கூட்டு என்பது எத்தன்கைது என்பதை தற்கால விஞ்ஞானங்கள் அனைத்தும் சேர்ந்து விளக்கு கின்றன. இது அவனுக்குத் தேசிகாது. ஆயினும் அவனுடைய சிந்தனைப் பாதை சரியான வழியில்தான் சென்றது. பொருளிலிருந்துதான் பிரபஞ்சத்தில், உயிரும் சிந்தனையும் உட்பட அனைத்தும் தோன்றியுள்ளன என்ற கருத்தை இன்றைய விஞ்ஞான அறிவிஞல் மெய்ப்பிக், கிருேம். . - 2 பஞ்சபூதக் கொள்கை பண்டைய இந்தியத் தத்தின் ஆசிரியர்களாலும், கிரேக்கத் தத்துவ ஆசிரியர்களாலும் விளக்கப்பட்டது. பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது என்ற ஆரம்ப பகுப்புவாதக் கொள்கையை அவர்கள் கூறிஞர்கள். சிலர் உலகத்தின் மூலங்களாக மண், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐந்தையும் சிலர் ஆகாதும் தவிர மற்றைய நான்கையும், சிலர் இவற்றின் குணங்களான உலர்தல், நன்னதல், வேப்பம், குளிர் ஆகியவற்றையும் கூறிஞர்கள். இக்குணங்களால் பூதங்கள் உருவாவதாக அவர்கள் கூறினர். விஞ்ஞானம் வளர்ச்சி பெருத காலத்தில் இவற்றையே உலகின் மூலங்களாக அவர்களால் கருத முடித்தது. அப்பொழுது உலகிலுள்ள பல பொருள்களை ஆராயவோ, அவற்றை பிரித்தறிகிற விஞ்ஞான முறைகளோ அவர் களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே தம் அனுபவ 芝る3