பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகிய நான்கு மூலகங் களின் அணுக்கள். இவ்வமிளுே அமிலங்கள் பல ஒன்று: கூடினல் அவற்றின் உள்ளமைப்பு சிக்கலடைந்து புதிய பண் புடைய பொருள் கிடைக்கிறது. இதுவே புரோடோ பிளாஸம். இதற்கு ஒர் மெம்ப்ரேன் உறையாகச் சேர்ந்து விட்டால், அதுவே உயிருள்ள செல்லாகும். இப்பொழுது தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளக் கூடிய உயிருடைக: செல், உயிரற்ற அணுக்களின் சேர்க்கையால் உண்டாவதை வருணித்தோம். இந்த மாறுதல்களின் வரிசையை ஆராய்ச்சி யின் மூலம் இரு சோவியத் விஞ்ஞானிகள், (லெபிஷின்ல் காயா, ஒபாரின்) என்பவர்கள் ஆராய்ச்சி மூலம் புலப்படுத்தி உள்ளார்கள். உயிரற்ற அமினே அமில மூலக்கூறுகளிலி ருந்து உயிருள்ள செல் தோன்றுகிற ரசாயன மாறுதல், செயல் முறையை லெபிஷின்ஸ்காயா எழுதிய Origin of the cei என்ற நூலிலும், ஒபாரின் எழுதிய Origin of life என்தி நூல்களில் விரிவாகக் காணலாம். அதாவது நீலகேசி கேட்ட *Gogoşşâ gošš (non-sentient) G3563rib (Sentient) தோன்றுமா என்ற கேள்விக்கு இந்நூல்கள் விடையணிக் கின்றன. பொருள்கள் சிக்கலான அமைப்படையும் பொழுது புதிதாகத் தோன்றி ஒரு பண்புதான் சேதனம் 2.ustrř (sentience). - இன்று நாம் பதிலளிப்பதுபோல் பூதவாதி பதிலளித் திருக்க முடியாது. நீலகேசி கேள்வி கேட்டு விட்டாள். பதிலளிக்க ஆயிரம் ஆண்டு விஞ்ஞான முயற்சி தேவையா யிருந்தது. உயிரியல் விஞ்ஞானத்தில் விர்சாவ் செல்லக் கண்டுபிடித்து அதன் அமைப்பை விளக்கினர். Lo கெமிஸ் ட்ரி வளர்ச்சியடைந்து, இவையிரண்டையும் இணைக்கிற பல நுட்பமான சோதனைக் கருவிகள் கண்டு பிடித்த பின்னரே இக்கேள்விக்கு விடை கிடைத்தது. இவ் விஞ்ஞானங்கள் வளர்ச்சி பெற்றதற்கு சமுதாய வளர்ச்சிக்கு ஒரு காரணமான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே காரண மாகும். அவை வளர்ச்சியுருத காலத்தில், விஞ்ஞான அறிவும் பூதவாதத்தோடு நின்றது. அதன் மூலம் நீலகேசி யின் வினவிற்கு விடை கூற முடியவில்லை. 塞等5