பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகாயதன் மதத்தில் முந்திய நூல்களில் காணப்படும். கருத்துக் கூறுகளோடு சில புதிய விளக்கங்களும் உள்ளன. புதிய விளக்கங்களைச் சற்று விரிவாகக் காண்போம். தொடர்ச்சிக்காகப் பழைய நூல்களிற் காணப்படும் பழை: கருத்துக்களையும் சுருக்கமாகக் கூறுவோம். முதலில் இந்நூலின் பரபக்கத்தில் உலகாயதன் காட்சி மட்டுமே அறிவு தோன்றும் பிரமாணம் என்று கூறுகிருன். பிற நூல்களில் இல்லாததொன்று, காட்சியை ஆறு வகைப் படுத்துகிருன். அவற்றை "மனம் ஆதி” ஆறு வகை வானவை என்று கூறுகிருன். பூதங்களின் ரூபம் என்று நான்கு பண்புகளைக் கூறுகிரு:ன். அவை கடினம், 2) சீதம் (குளிர்), 3) வெம்மை, 4) சலனம் என்பவை. பூதங்கள் இவற்ருேடு கூடும். அப்பூதங்கள் ரூடங்கனோடு கூடியபின் அவற்றின் பெயர்கள் தலம், புனல், கல்ை, காற்று என்பனவாம். இவற்றின் குணங்கள் நாற்றம், இரத்தம், உருவம், பரிசம் என்பனவாம். இவை கூடும்பொழுது 'வாயு பூதத்திலே நின்று மூன்று பூதங்களில் ஒன்றி. லொன்ருக அடைவே கூடப்படும்.” (உரை) 'அப்பூதங்களின் சொருபங்களும் குணங்களும் தம்மில் ஒத்துக் கூடுகிற கூட்டத்திலே வடிவுகள் பலவுண்டாகும்.” குயவனது சக்கரத்தில் வைத்த மண்ணிலிருந்து பல உருவ முடைய பாண்டங்கள் தோன்றுவதுபோல, நீரில் கிளம்பிய குமிழியைப்போல புத்தியும், குணமும் பொறிபுலன்களும் இவ்வுருவினிடத்துத் தோன்றும்.” பூதங்களிலிருந்து வாயு பிரிய இந்திரியங்கள் கெடும். தாவர் சங்கமங்களும் இறக்கும். இலையிறந்தால் பூதங்கள் எஞ்சும். இவ்வாறு பூதங்கள் கூடுவதால் உருக்கள் தோன்றி வாயுக் கெட இறத்தலன்றி, முன் செய்த கர்மம் பின்தொடரும் என்றும். இதனைப் புசிக்கத் தக்கதோர் ஆன்மாவுண்டென்றும், இவற்றைக் கூட்டுவான் ஒரு கர்த்தாவுண்டென்றும் சமயிகள் உலகத்தாரை மயக்கு கின்றனர். இவ்வாறு பிற சமயத்தார் கூறுவது மலடி பெற்ற, 257