பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகன் முயலின் கொம்பிலேறி ஆகாயத்தில் பூத்த பூவைப் பறித்தான் என்று சொல்லுவதோடு ஒக்கும். இது உலகாயதன் கூற்று. இப்பிறப்பில் செய்த கன்மங்கள் இவ்வுடம்பு கெட, கெடக் காண்கிருேம். பின்னர் பிற்பிறப்பில் கூடுவது எவ்வாறு? ஸ்துலவுடல் போய் சூட்சுமமாய் நிலவுமென்பது, திரியோடு கூடிநிற்கும் விளக்கொளி, அத்தீயை நீக்கி தனியே நின்று ஒளிரும் என்று கூறுவது போலும். வெற்றிலேயும் பாக்கு முதலியனவும் உமிழ் நீரோடு கூடினல் சிவப்புண்டாவதுபோல பூதக் கூட்டத்தில் ஒர் உணர்வு உண்டாகும். அதுவன்றி ஆன்மாவொன்றில்லை. இனிக் கடவுள் இல்லை என்று உலகாயதன் வாதாடு கிருன், கடவுள் உருவமற்றவன் என்று கூறிஞல் அறிவு மில்லாதவனுய் ஆகாயம் போல் ஆவான். உருவமுடையவன் என்று கூறினால், பூதக் கூட்டத்தில் தோன்றுதல் வேண்டும் இரண்டும் உடையவன் எனில் ஆகாயத்தில் கல்லே விட்டெறிந்தால் கூடிநிற்குமோ?

  • பிருதிவி பூதத்தே உணர்வு தோன்றி, அதனல் உடலும், அவ்வுடலிலே புத்தியும், புத்தியிலே பேதலிக்கப் பட்ட மனமும் உண்டாய் வேறுபட்டன’’ என்று உங்கள் வேதமே சொல்லுகிறது.

இனி உலகாயதன் கூறுவதாகச் சிவஞான சித்தியார் கூறுவதெல்லாம் தத்துவத்தோடு தொடர்புடையனவல்ல. தனக்கு ஒழுக்கமில்லையென்றும், பெண்போகமே சிறந்த போகமென்றும் , அதனே, நுகராமல், துறந்து சுவர்க்கம் சென்று காணப்போவது என்னவென்றும் உலகாயதன் கூற்ருகக் கூறப்படுகிறது. மேலும் வாமாச்சாரம் என்னும் தந்திரிகர் சமயமும், இவனது சமயமும் ஒன்றென்று ஆசிரியர் குற்றும் சாட்டுகிருர், வாமாச்சாரிகள் பஞ்ச மகாரங்கள் என்ற மது, மாது, மாமிசம் முதலியவற்றை சடங்காசார 磨兹母