பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையில் நுகர்பவர்கள். இவர்கள் தாய்த் தெய்வத்தை வழிபடும் சாக்தேயர்கள். சக்தியை உலகத்தோற்ற மனத்திற்கும் காரணமானவள் என்று கூறுவர். இவர் களுக்கும் உலோகாயதருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லே. இதுவே பரபக்க உலோகாயதக் கருத்துக்கள். இனி சிவஞான சித்தியார் இக் கருத்துக்களுக்குக் கூறும் தடை களைக் காண்போம். முதலிரண்டு பாடல்களில் காட் மட்டும் உலகாயதனது அளவையென்று கருதி அனுமானம் இன்றி எவ்வாறு அவன் தன் கொள்கையை நிறுவ முடியும் என்று ஆசிரியர் கேட்கிருர், 'மாதா பிதா உண்டென்று மெல்லக் கருதிய நெறி நீ கூறிய காட்சியன்று, அனுமானமே" "பூதக் கூட்டத்தில் கருத்து தோன்றும் என்று கூறியது பாது, உன் கட்சியும் அனுமானப் பிரமானமே.” நூல்களின் பிரமாணத்தாலே எதிர் காலத்து வினைகளைச் சோதிடர் கூறுவர். புதையல் இருக்கு மிடத்தை அறியலாம். இதனே.ே தாங்கள் ஆகமப் பிரமாணம் என்று கூறுகிருேம். மண்ணப் பாண்டமாக்குவதற்கு குயவன் வேண்டும். வெற்றிலை பாக்கு முதலியன சேர்ந்தவிடத்து சிவப்பு என்னும் ஒரு தன்மைதானே தோன்துகிறது: ஐம்பூதங்களின் கூட்டத் தால் பொறிகளும், புலன்களும், குணங்களும் தனித்தனி உடலிடத்துத் தோன்றியது எவ்வாறு வெற்றிலை முதலிய வற்தைக் கூட்டுவதற்கு ஒருவன் வேண்டும். அதுபோல பூதச் செயலுக்கும் ஒருவன் வேண்டுமன்ருே ? இனி கன்மம் உண்டென்து ஆசிரியர் கூறுகிருச். கன்மம் இல்லையாயின் உயிரினங்களின் பேதங்களை எவ்வாறு விளக்கு வாய்? அறிவாலறியப்படும் எழுத்துக்களும், துகர்ச்சிகளுக், குண பேதங்களும் பூதக்கூட்டத்தால் உண்டாகாது. கன்மத்தால்தான் சாதி பேதமும் குண பேதமும் ஏற்படக் கூடும். பூதக் கூட்டத்தில் அறிவு தோன்ரு என்று ஆசிரியர் லோகாயதத்தின் கூற்றை மறுகிரு.ர். 盛諡