பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீரிலும் நெருப்பிலும் அறிவு காணப்படாததால் பூதங்கள் அறிவாகா. உடலில் பூதக் கூட்டம் ஏற்படும் பொழுது அறிவு தோன்றுமென்ருல், உயிரற்ற உடலில் அறிவு காணப்படுவதில்லையே. பிராணளுல் அறிவுண்டாகும் என்ருல், உறக்கத்தில் பிரசனன் பிரியாமலிருக்கவும் அறிவு தோன்றவில்லையே. எனவே வேருேர் அறிவுண்டென்பது தெளிவு. - "அறிவென்று வேரு முதலில்லை; உடற் குணமே அறிவென்று நீ கூறின், ஆனே முதல் எறும்பீருக எடுத்த வுடலிற் பெரிதானவற்றின் உதிக்குமறிவு பெரியதாயும் சிறிதானவற்றில் உதிக்கும் அளவு சிறிதாயும் இருக்க வேண்டும். அங்ங்னமன்றி பெரிய உடலையுடைய யானே யுடற்கு அறிவு சிறிதாயும், சிறிய உடலையுடைய மானுடற்கு அறிவு பெரிதாகம் இருப்பதேன்? ஆதலின் அறிவு உடற்குணமன்று.” 'பூதக் கூட்டமே பொருத்தப்பட்ட உடலுக்குக்காரண மாயின், பெண் ஆண்கள் காதலோடு புணரும் புணர்ச்சி காரணமாக உருக்கள் காரிகப்படுவானேன் ? அங்கனமானது ஆநாதிகே. கர்த்தா தாயகியோடு கூடிப் போகத்தை விரும்ப அது காரணமாக உருக்கள் காரியப்பட்டு வருதலன்றி. பூதக் கூட்டம் காரணம் எனப்படாது.”

  • நீ கூறிய பூதங்கள் காரியப்பட்டு பொலிவினையுடைத் தாய்ப் புசிப்பளவு நிலை பெற்று மீளவும் அழியா நிற்கும். ஆதலால் இவற்றை ஆக்கியும், அழித்துஞ்செய்வான் ஒரு கர்த்தாவுண்டென்று அறிவாயாக."

பஞ்சபூதக் கொள்கையில் ஜம்பூதங்கள் உண்டு என்று பிறநூல்களின் பரபக்கம் கூறுகின்றன. சித்தியாரின் பரபக்கத்தில் நான்கு பூ த ங் க ளே உள்ளனவென்று: உலகாயதன் கூறுகிருன். இவன் பூதவாதியின் வேருனவன் என்பது ஆசிரியர் கருத்துப்போலும், மணிமேகலையில் "வேறுள விகற்பமும் உலகாயதன் உணர்வே" என்று 250