பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளேப் புணர்ந்தான். அவள் அக்னியின் வித்தைச் (சகரித்துக்கொண்டு கிருடி என்ற பெண் கருடப் பறவை 1ாகிப் பறந்துபோய் இமயமலை யடிவாரத்தில் சரவணப் பொய்கையருகில் அசுரர்களும், ராட்சளிகளும் நிறைந்த ஒர் இடத்தில் அதனை வைத்தாள். இவ்வாறு ஆறுநாட்கள் நடந்தது. அருந்ததியின் கற்பின் வலிமையால், அவளுருவை எடுக்கும் சக்தி சுவாஹாவுக்கு இல்லாமற் போயிற்று. எனவே ஆறுமுறைதான் அக்னியின் வித்தைக் கிருடி உருவத்தில் சுவாஹா சரவணப் பொய்கையருகில் கொண்டு போய்ச் சேர்த்தாள். அவ்விடத்திற்கு 'காஞ்சனே குண்ட" மென்று பெயர். அங்கே ஒன்று திரண்டு, அக்னியின் வித்து குழந்தையாக உருமாறிற்று. மூன்ரும்நாள் வித்து சிசுவாயிற்று. நான்காம்நாள் குகன் ஆயிற்று. அன்று சிவப்பு மேகமொன்று அக்குழந்தை யைச் சூழ்ந்தது. செங்கதிர் போன்று இக்குழந்தை ஒளி வீசியது. முப்புரங்களே எரித்த சிவனுடைய வில்லே இக்குழந்தை எடுத்துக்கொண்டது. சிங்கத்தைப்போல கர்ஜித்தது, இடிபோன்ற முழுக்கத்தைக் கேட்டு ஓடிவந்த சித்ர நாகன், ஐராவத நாகன் என்ற இரண்டு அசுரர்களை இரண்டு கைகளில் குழந்தை இறுகப் பற்றிக் கொண்டது. சக்தியை ஒரு கையாலும் சேவலை மற்ருேர் கையிலும் ஏற்றுக் கொண்டது. பிறகு சக்தியை எடுத்து ஸ்கந்தன் ஊதினன். அதன் முழக்கத்தைக் கேட்டு உலகமெலலாம் தடுங்கிற்று. மக்களும் தேவரும் அவனிடம் அபயமடைந்து தங்களைக் காப்பாற்ற வேண்டினர். சிறுவன் தனக்குச் சக்தியுண்டு என்று காட்டுவதற்காக கிரவுஞ்ச மலையின்மீது வேலை எய்தான். மலே பொடிப் பொடியாயிற்று. சிறுவன் மீண்டும் கர்ஜனை செய்தான். தனது சக்தியை மீண்டும் மலைமீது எறிந்து அதன் சிகரத்தை உடைத் தெறிந்தான். மலைகளெல்லாம் அவனை வணங்கின. அது சுக்கில பட்சம் ஐந்தாம்நாள் நடந்தது. இத்தகைய சிறுவனப் பெற்றுவிட்டதற்காக அக்கினியையும், சுவாஹா வையும் சைத்ரரதம் என்னும் தேவ நகரத்திலிருந்த்