பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறப்பட்டுள்ளது. அதல்ை இவ்வேறுபாடு காட்டப் பட்டுள்ளது போலும். காட்சிப் பிரமாணம் ஒ ன் .ே ) கொள்ளும் பூதவாதிக்குக் காட்சியால் காணமுடியாத ஆகாயம் பொருந்தாதது எனக் கருதி இவ்வாசிரியர் அதனைப் பூதமன்று என ஒதுக்கிவிட்டார் என்று தோன்றுகிறது. இன்னெரு புதுமையையும் உலகாயதன் கருத்தில் காட்டு கிருர். நான்கு பூதங்களான மண், தீ, நீர் வளிகளோடு சொருபங்களான தலம், வெம்மை, சீதம், சலனம் முதலிய நான்கு குணங்களும் சேர்ந்து வேறு பெயர்பெற்றனவென்று உலகாயதன் சொல்லுகிரு:ன். இவற்றின் குணங்களையும் நான்காக அவன் கூறுகிருன், இது புதுப்புனேவாகவே தோன்றுகிறது. குணம் குணி என்ற பேதத்தையே உலகாயதர் ஏற்றுக்கொள்வதில்லே. இவற்றை வேறுபடுத்த இயலாது என்பது அவர்கள் கூற்று. எனவே தனியாக உருவங்களும், பூதங்களும் கூடிக்குணங்களைப் படைத்தன என்பது உலகாயதர் கூற்ருகக் கூறுவது அவர் களது அடிப்படைத் தத்துவப்போக்கோடு பொருந்தவில்லை. இது சைவ சித்தாந்திகளின் புதுப்புனைவே. பூதக் கூட்டத்தில் உணர்வு தோன்றும் என்ற உலகாயதன் கூற்றும், ஆன்மா, கர்மம், கடவுள் கறுப்புக் கருத்துக்களும் அவனுடைய தத்துவத்திற்குப் பொருத்த மாகவே கூறப்பட்டுள்ளன. இனி உலகாயதன் கருத்துக் கூறுகளுக்குச் சித்தாந்தம் கூறும் தடைகளே ஆராய்வோம். அனுமானம் பற்றிய தடைதான் முதலில் கூறப்படு கிறது. முன்னரே இத்தடைக்கு விளக்கம் கூறிவிட்டோம். எனவே அதனை மீண்டும் கூறவேண்டியதில்லை. அனுமானப் பிரமாணத்தைச் சைவ சித்தாந்தி ஏன் முக்கியப்படுத்துகிருர்: அனுமானம் இல்லாமல், 'ஜீவன் நித்தியமானது, கன்ம பலஞல் பிறப்பு உண்டாகிறது. கன்ம 5 17 سه ، وي، قام