பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலஞலேயே வேறுபாடுகள் உண்டாகின்றன: உயர்பிறப்பும், இழிபிறப்பும், கன்ம பலஞலேயே சம்பவிக்கின்றன; இறைவன் அருளாலேயே அறிவு தோன்றுகிறது. இறைவன் அருளா லேயே உயிர் (பசு) பாசத்திலிருந்து நீங்கி (bondage) அறியாமை வீடுபெறும். இறைவனருளின்றி மனித உயிர் வீடுபெருது’ போன்ற சமயக் கொள்கைக்கு நேர்காட்சிப் பிரகானமும், அதன் எல்லைக்குட்பட்ட அனுமானப் பிரமானமும் போதாது. எனவே எல்லையற்ற அனுமான மும் பண்டைய நூல்களின் கருத்துக்களும் அவசியம். இதற் காகத் தான் சைவ சித்தாந்தி அனுமானமும் ஆகமமும் முக்கிய பிரமாணங்கள் என்று வாதிடுகிருன். அனுமானத்தை மனிதகுல அனுபவ வரம்பிற்குட்பட்டு சிந்திப்பதற்குப் பயன்படுத்துவதை லோகாயதவாதி எதிர்க்க இன்,ை 'புகை காணப்படுவதால் தீ எரிதல் வேண்டும்’ "ஆற்றில் சந்தனக் கட்டைகளும், மரம் செடி கொடி களும் அடித்து வரப்படுவதால் மலையில் மழை பெய்யும் மேகம் கறுத்திருப்பதால் மழை பெய்யும்’ "பாண்டம் இருப்பதால் குயவன் இருத்தல் வேண்டும்' இவற்றை அனுமானம் இன்றி எவ்வாறறிவது என்று சைவ சித்தாந்திகள் மட்டுமல்லாமல், ஜைனரும், பெளத் தரும், அத்வைதிகளும், நையாயிகளும் லோகாயதனை நோக்கிக் கேட்கிருர்கள். அனுமானத்தால் அனுபவ எல்லைக்கு உட்பட்டவற்றை யூகம் செய்யலாம். (infet) என்பது லோகாயதவாதிக்கு உடன்பாடே. அவனுடையவாதத்தில் இது காட்டப்படவில்லை. ஏனெனில் அனுமானத்தை அவன் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறி அவனுடைய தருக்க முறையைத் தாக்க எதிரிகள் முயலுகிரு.ர்கள். அவன் எவ்வித அனுமானத்தை ஒப்புக்கொள்ளவில்லை? வரம்பற்ற அனுமானங்களை ஒப்புக்கொள்ளவில்லை. எவ்வித பெளதீக 恕莎盛