பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருபனத்திற்கும் உட்படுத்த முடியாத அனுமானத்தை அவர்கள் ஏற்பதில்லை. உதாரணமாக: 'கனவில் உணர்வு இல்லை, உடல் இருக்கிறது. எனவே உணர்வு உடலின் வேரு:னது. அது நிலையானது, அழியாதது. கர்மத்தை அனுபவிப்பது, கர்ம பலனை நுகரப் பல பிறவிகள் எடுப்பது.” "கர்மம் தொடர்ச்சியானது உயிர் அதனே அனுபவிக்க வேண்டும். எனவே இப்பிறப்புக்குப் பின் அனுபவிக்க மறுபிறப்பு வேண்டும்.” இவையிரண்டுமே வரம்பற்ற அனுமானங்கள் இவற்றைத் தான் லோகாயதன் ஏற்றுக்கொள்வதில்லை. அது போலவே கருமபலனே அனுபவிக்க சுவர்க்கமும் நரகமும் அனுமானிக்கப் பட்டுள்ளன. அவற்றையும் அவன் ஒப்புக்கொள்வதில்லை. வெற்றிலே முதலியன சேரும்பொழுது சிவப்பு உண்டாகிறது. அது ஒரு தன்மைதானே? பல தன்மைகளான பொறிகளும், புலன்களும், அறிவும் ஆகியவை எவ்வாறு ஐம்பூதிச் சேர்க்கை யால் தோன்றும்? - - ஐம்பூத அறிவு புராதன அறிவு. ஐம்பூதமெனப் பிரிக்கப்பட்ட பொருளின் தன்மைகள் பற்றி இன்று பல விஞ்ஞானங்கள் ஆராய்ந்துள்ளன. நாம் முன்னர் கூறியது போல 194 மூலகங்களின் அணுக்கள் பலவாறு, பல எண்ணளவில்கூடி லட்சம் பொருள்களைத் தோற்றுவிக் கின்றன. இவை வெவ்வேறு தன்மையுடையவை. 104 வகையான அணுக்களையே எலக்ட்ரான், ப்ரோடான். நியூட்ரான், பாஸிட்ரான், மீஸான், நெட்ரான் முதலிய அணுவினும் சிறிய துகள்கள் உண்டாக்குகின்றன. இவற்றின் வேகமாறுதலால் புதிய தன்மைகளும் தோன்றுகின்றன. இவையனைத்தும் பொருள்களும், அவற்றின் செயல் ளுமே. -

  1. 63