பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித உடலை உடலியல், உயிரியல் ரசாயனம் முதலிய விஞ்ஞானங்கள் ஆராய்கின்றன, மனித உடலின் தோற்றமே பரிணும மாற்றங்களின் விளைவென்பதை டார்வினது கொள்கையும், அவருடைய கொள்கை வளர்ச்சியான தற்காலப் பரிணுமக் கொள்கையும் விளக்குகின்றன. மூளையின் உறுப்பியல் மூலமே உள்ளக்கூறுகள் அறிவு முதலியனவற்றை விளக்க இயலும், உளவியல் மேலும் மேலும் பொருளியல் அறிவால் விளக்க முற்று வருகிறது. அறியாமை காரணமாகவே கற்பனையான ஜீவன், புத்தி, அகங்காரம், மனம் முதலிய தத்துவங்களை இன்னும் உளதென்று மதவாதிகள் நம்புகிரு.ர்கள். பூதக்கூட்டத்தில் அறிவுண்டாகுமென்ருல் உடல் உதங்கும்போது அறிவில்லையே என்று சித்தாந்தி கேட்கிரு.ர். இங்கு ஐம்பூதம் என்பதைப் பொருள் என்று தற்கால விளக்கமாகக் கொள்ள வேண்டும். மூளையின் செல்களின் செயலே அறிவு. அவை செயல்பட்டால் உணர்வு காணப் படும். அவை ஒய்வு பெற்ருல் உணர்வு காணப்படாது. g).5&r (exitation) grosógã Graśrgyū (inhibition) அடங்குதல் என்தும் மூளையை ஆராய்கிற விஞ்ஞானிகள் அழைப்பார்கள். மூளையினுள் குறிப்பிட்ட வேகத்தில் உயிரியல் ரசாயனச் செயல்கள் நடைபெற்ருல் அது உணரும். அவ்வேகம் மிகக் குறைந்தால் உணராது. எனவே உணர்வு உடலின் வேறு என்று கொள்ள வேண்டிய தில்லை. உடலின் ஒரு பகுதியில் வலியை மூளை உணருகிறது. அப்பொழுது வலி தோன்றுகிற இடத்திலிருந்து நரம்பு மூலம் அதிர்வுகள் வலியுணரக்கூடிய மூளையின் பகுதியிலுள்ள செல்களைப் பாதிக்கின்றன. நரம்பு செல்களின் வழியே அதிர்வு செல்லாமல் ஓர் அனெஸ்தெடிக் மருந்து மூலம் இத்து விட்டாலோ, மூளையின் செல்களின் ரசாயனச் செயல்களின் வேகத்தைக் குறைக்கும் ஒரு மருந்தை உட்செலுத்திவிட்டாலோ, வலியை நாம் அறிவதில்லை. வலியில்லாத பிரசவம் பிரசவத்தின்போது சாதாரணமாகி வருகிறது. இங்கு மூளையின் இரண்டு பகுதிகள் செயல்படு 364