பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்றன. ஒன்று சிசுவைக் கருப்பையினின்று வெளியே தள்ளச் செயல்படும் தசைகளை இயங்கச் செய்யும் நரம்புகள். மற்றென்று தசைகள் இயங்குவதால் வலி அதிர்வை மூளைக்குச் செலுத்தும் நரம்புகள். வலியைச் செலுத்தும் நரம்புகளேயோ, வலியை உணரும் மூளையையோ ஒய்வு கொள்ளச் செய்தால் வலி தெரிவதில்லை. இயங்கு தசைகளை மட்டும், அதளுேடு தொடர்பான நரம்புகள் இயங்கச் செய்யும். எனவே உணர்வுகள், உணர்வின்மை எல்லாம் மூளையின் செல்களில் நடைபெறும் உயிரியல் ரசாயன மாற்றங்களின் வேகத்தைப் பொறுத்தது. இத்தகைய விடையை உயிரியல் ரசாயனம், உடலியல் விஞ்ஞானம், மூளையின் உறுப்பியல் எல்லாம் தெரியாத காலத்தில் உலகாயதன் பதிலளித்திருக்க முடியாது. ஆளுல் இவ்விஞ்ஞானங்களெல்லாம் தோன்றுவதற்குரிய சிந்தனைப் பாதையான பொருள்முதல் வாதத்தின் ஆரம்பக் கூறுகள் உலகாயதனின் தத்துவத்தில் இருந்தது. 'பூதங்களின் கூட்டம் உடல். அப்பூதங்களின் கூட்டத்தில் அறிவு தோன்றுமாயின், உடல் பெரிதாயிருப்பின் அறிவு பெரிதாயிருக்க வேண்டுமே. உடல் சிறிதாயிருந் தால் அறிவும் சிறிதாயிருக்க வேண்டுமே” என்று சித்தாந்தி கேட்கிருர், உலகாயதன் பதில் கூறவில்லை என்று சித்தாத்தி கூறுகிரு.ர். பொருள் அணுக்களின் கூட்டமே உடல். இதனைச் சித்தாந்தி ஒப்புக் கொள்ளுகிருர், ஏன், பழைய விஞ்ஞான அறிவின் எல்லைக்குட்பட்ட பூதச்சேர்க்கையே உடல் என்பதை சித்தாந்தி மறுக்கவில்லை. ஒரிடத்தில் நீரும் நெருப்பும் எப்படிக் கூடும் என்று கூறினாலும் மற்ருே.ரிடத்தில் பூதச் சேர்க்கையால் ஜடமாகிய இவ்வுடல் உண்டாகிற தென்பதை சித்தாந்தி ஒப்புக் கொள்ளுகிருர். உடல் பெரிதாயிருந்தால் அதன் விளைவான அறிவும் பெரிதாயிருக்க வேண்டுமே என்கிரு.ர். 365