பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால விஞ்ஞானம் இக்கேள்விக்கு விடையளிக்கிறது. அறிவு ஒரு தனிப் பொருளல்ல. அதற்கு சிறிது பெரிது என்ற பரிமாணம் கிடையாது. அது மூளையின் செயல் (Function) மூளையிலுள்ள மடிப்புக்கள் அதிகமிருந்தால் அறிவு கூர்மையாயிருக்கும். மடிப்புக்கள் குறைவாயிருந்தால் கூர்மை குறையும், யானையின் மூளையையும் மனிதன் மூளையையும் சோதித்தறிந்த விஞ்ஞானிகள் யானையின் மூளையில், மனித மூளையைவிட மடிப்புக் குறைவென்று கண்டுள்ளார்கள். மடிப்பு அதிகமாயிருந்தால் ஒரே பரப்பில் செல்கள் எண்ணிக்கை அதிகமாயிருக்கும். ஒரு சதுர அங்குலத்தில், யானையின் மூளையிலுள்ளதைவிடப் பல மடங்கு எண்ணுள்ள செல்கள் மனித மூளையிலுள்ளன. ஒரு மனிதனுக்கும் மற்ருேர் மனிதனுக்கும்கூட இத்தன் மையில் வேறுபாடு உள்ளது. எனவே மூளை, மூலக்கூறு களின் கூட்டமாயினும், ஒரே பரப்பில் உள்ள செல்களின் எண்ணப் பொறுத்துச் செயல் திறனில் வேறுபடும். பூதக்கூட்டம் அல்லது பொருளின் சேர்க்கை அல்லது அணுக்களின் சேர்க்கையால் உண்டாகும் செல்களில் ஒற்றைச்செல் உயிரினங்கள் ஆண் பெண் புணர்ச்சியின்றியே இனவிருத்தி செய்கின்றன. செடிகளில் சிலவும் அவ்வாறே வேறு உயிர் இனங்கள் ஆண் பெண்ணுகப் பிரிந்து, அவற்றுள் இருக்கும் செல்லால் ஆன பொருள்களின் கூட்டத்தால் கருவை உண்டாக்குகின்றன. பரிமை வளர்ச்சியால், செயல் பிரிவினை, உறுப்புப் பிரிவினைகள் ஏற்பட்டு, பல்வகை களில் இனப் பெருக்கச் செயல்கள் நடைபெறுகின்றன. பொருள் கூட்டமும், அதன் செயல்களும் எண்ணற்றவை. ஆனல் சித்தாந்தி பொருள் கூட்டத்தால் உடல் உண்டாகு மாயின், ஆண் பெண் புணர்ச்சி எதற்கு?’ என்று கேட்கிரு.ர். அவர் கூறும் காரணம் வருமாறு: 'பூதக்கூட்டமே பொருந்தப்பட்ட உடலுக்குக் காரணமாயின், பெண், ஆண்கள் காதலோடு புணரும் புணர்ச்சி காரணமாக உருக்கள் காரியப்படுவானேன்? அங்ங்ணமானது அநாதியே கர்த்தா நாயகியோடு கூடிப் போகத்தை விரும்ப, அது 266