பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணமாக உருக்கள் காரியப்பட்டு வருதலன்றி பூதக் கூட்டம் காரணம் எனப்படாது.” இக்காரணம் தலைகீழாக நிற்கிறது. மானிடவியல் நூலோர் மனிதன் ஒருகாலத்தில் பிரசஞ்சத்தின் செயல்கள் தன் செயல்கள் போன்றவை என்றெண்ணி, சில செயல் களேச் செய்து, இயற்கையை அவ்வாறு செய்யத் தூண்டலாம் என்று நினைத்தான் என்று கூறுகிருர்கள். பிரபஞ்சத்தைத் தன்னைப்போல நடக்கத் தூண்டும் செயல்கள் மந்திரம் (Magic) எனப்படும். இத்தகைய சிந்தனை நிலையில் இன்றும் பல இனக்குழு மக்கள் உள்ளனர். பயிர் செழிப்பாக வளர, வரப்புகளில் ஆண் பெண்களின் வரை முறையற்ற புணர்ச்சியை ஓர் சடங்காகக் கொண்டாடும் இனக்குழுக்கள் உலகில் உள்ளன. ஆண் பெண் புணர்ச்சியால் இனம் பெருகுவதுபோல், உழுத வயலில் ஆண் பெண் புணர்த்தால் நல்ல விளேச்சல் காணும் என்ற நம்பிக்கை வேதமந்திரங் களில் காணப்படுகிறது, மந்திர நம்பிக்கைக்குப்பின் பல தெய்வ நம்பிக்கை தோன்றிய காலத்தில் மனிதர்களுக்கு உணவு கொடுத்து நமக்கொரு வேலை செய்யச்சொல்வது போல தெய்வங்களைத் திருப்தி செய்து விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ள மக்கள் எண்ணினர். இத்தகைய நம்பிக்கை இன்றும் பல தெய்வ நம்பிக்கையுள்ள குழுக்களில் காணலாம். இதற்குப் பின் இயற்கைச் சக்திகளுக்கு மானிடவுருவளித்து நமது செயல் போலவே அவற்றின் செயல்களும் உள்ளன என்று நம்பத்தொடங்கிய காலத்தில், ஆண் பெண் புணர்ச்சியால் சிசுபிறப்பதுபோல், இவ்வுலகம், ஆண் பெண் சக்திகளின் புணர்ச்சியால் பிறந்ததென்றும் அதளுலேயே மக்களும் ஆண் பெண் புணர்ச்சியால் தோன்று கிருர்கள் என்றும் நம்ப ஆரம்பித்தனர். இது இயற்கை சக்திகளுக்கு மனிதன் தனதுருவத்தைக் கற்பனை செய்த ஆரம்ப புனைகதைக் காலத்தில் தோன்றிய சிந்தன. ஆண் பெண் புணர்ச்சி அனுபவப் பிரமாணம்; சிசு பிறப்பதும் அனுபவப்பிரமாணம். இது இயற்கை நிகழ்ச்சி. கருவுரு வாதற்குரிய இரு நுண்ணுயிர்கள்கூட இது அவசியம் 367