பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னர் மனிதன் உலகின் தோற்றத்திற்கு ஆண் பெண் புணர்ச்சி அவசியமெனக் கருதின்ை. இத்தகை கற்பனையை (Anthropomorphic Myth) trafé; a gard towago's grärgy மானிடவியலார் அழைப்பார்கள். . இனிச் சித்தியாரின் இரு மறுதலைக் கருத்துக்களை விமர்சித்துவிட்டு இவ்வாய்வை முடிப்போம். உலகாயதன், பரபக்கத்தில் கருதப்படுவது போல அல்லாமல் அறிவுச் சாதனங்களாகக் காட்சியையும், அனுமானத்தையும் கைக்கொண் டிருந்தான் என்பதை முன்னர் விளக்கிளுேம். இனிச் சித்தாந்தியும், ஆத்திகரும், தமது சமயத்துக்கு ஒரு மூலபுருஷனை ஏற்றுக்கொள்கிற சமயிகளும், ஆகமம் அல்லது ஆப்த வாக்கிதம் என்பதை அறிவின் உயர்ந்த அளவையாக ஏற்றுக்கொள்கிருர்கள். ஆகமம் என்ருல் என்ன? ஆன்ருேர் மொழி என்பது பொருள், எல்லாச் சமயங்களும் ஆன்ருேர் ஒருவர்தான; இல்லை. வேதங்கள் தான்தோன்றி (எவரும் இயற்ருதவை) அதனுல் அதன் வாக்கியங்கள் முற்றிலும் உண்மையென்பர் மீமாம்சகர். அவர்களுக்கு வேதமே ஆகமம். அதுவே காட்சியிலும் அனுமானத்திலும் உயர்ந்த பிரமாணம், ஜைனர்களும், பெளத்தர்களும் ஆதியாகமத்தையும், திரிபிடகத்தையும் பிரமாணமாகக் கூறுவர். பெளத்தர் களில் நூற்றுக்கணக்கான பிரிவினர் பெயருக்குத் திரிபிடகத்தை ஆகமம் என ஒப்புக்கொண்டாலும், அவற்றிலுள்ள கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகளை யுடைய தம் தம் பிரிவினரின் நூல்கேைய பிரமாணமாகக் கொள்வர். தம் கொள்கைகளுக்கு ஏற்பத் திரிபிடகத்திற்கு உரையெழுதிக் கொள்வர். அத்துவைதிகள், பிரம்ம சூத்திரத்தை ஆகமம் என்பர். விசிஷ்டாத்துவைதிகளும் திதிெகளும் அவ்வாறே கூறுவர். ஆயினும் இவர் களுக்குள் தத்துவ வேறுபாடுகள் அடிப்படையானவை. இந்த வேறுபாடுகளை நிலைநிறுத்திக் கொள்ள ஒவ்வொரு வரும் பிரம்ம சூத்திரத்திற்குத் தங்கள் கொள்கைப்படி உரை யெழுதிக் கொள்வார்கள். - 268