பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயினும் ஆகமமே முழு உண்மை, அதுவே பூரண அறிவு என்பார்கள். எல்லாவற்றைப் பற்றியும் ஒரு மாமனிதர் அல்லது கடவுள் தமது பரிபூரண அறிவால் மனிதனுக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டுப் போய் விட்டதாகச் சொல்லுவார்கள். பழைய ஆகம வாக்கியம் அல்லது ஆப்த வாக்கியம் காலத்துக்கு ஒத்துவராதபோது வாக்கியத்தைத் திருத்தாமல் பொருளைத் திருத்தி உரை யெழுதிக் கொள்ளுவார்கள், சமயங்கள் யாவும் காட்சியையும், அனுமானத்தையும் அற்பமாக எண்ணுகின்றன. அறிவு. ஆகமத்தால் அல்லது முழு நிறைவான அறிவுடையவனல் வெளிப்படுத்துகிறது என்று நம்புகின்றன. காட்சியாலும், அனுமானத்தாலும் அறிய வேண்டிய இயற்கையின் இயக்கத்தை அறிந்து கொள்ள விடாமல் இக்கொள்கைகள் தடுத்தன. அறிவைத் தன்னுள்ளேயே மனிதன் தேடி, பல கற்பனைகள் உருவாக்கினன். ஆகமம், அவனது விஞ்ஞானத் தேட்ட ஆற்றலையும், அனுமான ஆற்றலையும் முடக்கிப் போட்டது. இன்று மனித சமுதாயத்தின் செயலே (Praxis) ஞானம் தோன்றக் காரணம் (Gnosis) என்று தற்கால அறிவளவை அறிஞர்கள் கூறுவார்கள். ஆனல் முற்கால ஆகம நம்பிக்கையோ, சமுதாயச் செயலை, இயற்கையோடு தொடர்பு கொண்டு, அதன்மீது செயல் புரிந்து. இயற்கையின் விதிகளே உணர்ந்து, அவ்விதிகளைப் பற்றிய அறிவால் இயற்கையை மாற்றித்தானும், மாறும் செயல்களே சிறப்பற்ற செயல்களென்றும். அவ்வாறு கிடைத்த அறிவை கீழான அறிவென்றும் கூறி மனிதனே அவனுடைய உள்ளத்தில் சிறை வைத்தது. சித்தாந்திகளின் பிரமாணம் என்ன? ஆகமம் என்பார்கள். இவற்றுள் என்ன தத்துவம் உள்ளது? இவற்றுள் பல என்ன சொல்லுகின்றன என்பதே யாருக்கும் தெரியாது. இவையாவும் வடமொழியில் உள்ளன. இவை பழமையானவை என்பது சைவர்களின் நம்பிக்கை, 啟釁