பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றைச் சிவபிரானே சனற் குமாரர் முதலிய நான்கு முனிவர்களுக்கு அருணிச் செய்தான் என்று சைவர்கள் நம்புகிருர்கள். இவ்வாகமங்களிலிருந்துதான் 14 மெய் கண்ட சாத்திரங்கள் தோன்றின என்று சொல்லப்படுகிறது. வேதம் பாலென்றும், நால்வர் தேவாரம் வெண்ணெய் என்றும் ஆகமங்கள் நெய்யென்றும் ஒரு செய்யுள் கூறுகிறது. தேவாரத்திற்கும் வேதத்திற்கும் கருத்தில் எவ்விதத் தொடர்புமில்லை. ஆகமங்களுக்கும் தேவாரத்திற்கும் என்ன தொடர்பு என்பது சைவ சித்தாந்திகளுக்கே தெரியாது. 'ஆகமங்கள் வடமொழியில் உள்ளனவே. தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு சித்தாந்திகள் படிக்க முடியாமல் அதன் கருத்தைத் தெரிந்து கொள்ள முடியவில்லையே' என்று கா. சு. பிள்ளையவர்கள் 1925இல் எழுதினர்கள். இன்னும் ஆகமங்கள் 56இல் ! தான் வடமொழி மூலத்தில் வெளியிடப் பட்டுள்ளன. மற்றவற்றில் சிலவற்றிற்கு வடமொழி ஏடுகள் இருக்கின்றன. மிகப்பலவற்றின் பெயர் மட்டும்தான் சில சித்தாந்த நூல்களிலிருந்து அறியப்படுகிறது. ஆயினும் 'ஆகமங்களே எங்களுக்கும் பிரமாணம். ஏனெனில் சிவபெருமான் அருளிச் செய்தது. பரிபூரணல்ை அருளிப் பெற்றதால் அதில்தான் பரிபூரண அறிவு உள்ளது” என்று சைவ சித்தாந்த அறிஞர்கள் எழுதுகிருர்கள். சாத்திரங்கள்: ஆகமங்களின் விளக்க நூல்கள் என்று எழுதுகிருர்கள், ஆனல் எந்தச் சைவ சித்தாந்த சாஸ்திரத்தின் மூலத்திலும். ஆகமங்கள் குறிப்பிடப்படவில்லை. . தெரியாத ஒன்றுதான் சைவர்களுக்கு ஆகமப்பிரமாணம் சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் ஆகமங்கள் என்ன சொல்லு கின்றன என்பதை சைவர்கள் அறியும் வரை தற்காலிகப் பிரமாணங்களே. விஞ்ஞானத்தின் எல்லைகளில் கூட இந்த ஆகமத்திற்கு ஆதிக்கம் உண்டு. ஏனெனில், காட்சியாலும் அனுபவத்தாலும் அறிகிற விஞ்ஞான அறிவு, ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் கொள்கைகளுக்கு முரண் ; ஆளுல் சமயவாதி ஆகமத்தைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்; விஞ்ஞான அறிவை ஒதுக்கிட வேண்டும். 羅穹驗