பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது 蔷岛酸魔 சித்தாந்தத்தின் நிலைமட்டுமன்று. ஆகமத்தைத் தலையாய பிரமாணமாக ஏற்றுக் கொள்கிற எல்லாத் தத்துவங்களின் நிலையும் அதுவே. சமயத்தின் முற்றமுடிந்த முடிவுகளைக் கூறும் ஆகம வாக்கியங்கள், வளர்ந்து செல்லும் விஞ்ஞான அறிவுக்கு விலங்கிடுகின்ற தன்மையுடையவை. கடைசியில் கடவுள் இல்லை என்ற கூற்றை மறுத்து சிவஞானசித்தியார் கூறுகிறது. இது தத்துவ வாதமன்று. சமய வாதமாகும். கடவுள் என்பதற்குப் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து, அதன் இயக்கங் களுக்கு நிமித்த காரணமாகி, அதனை அழிப்பவன் ஒருவன் உண்டென்பது கடவுள் கொள்கை. அறிவைத் தோற்று விப்பவன் கடவுள். மூன்றுவித அறியாமைகளைப் போக்குபவன் கடவுளே. இக்கருத்தை ஒப்புக் கொள்ாைத தத்துவங்களே இந்தியத் தத்துவங்களில் பெரும்பான்மை யாகும். வேத வாக்கியங்களில் பல, பல கடவுளரைப் பற்றிக் கூறுகின்றன. பிரபஞ்சத்தின் பல கூறுகளுக்குப் பல கடவுளர்கள் இயக்கு சக்தியாக உள்ளனர் என்று அவை கூறும். அவ்வாருயின் ஒரே கடவுள் சர்வசக்தி உடையவர். அவர் பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணம் என்பதை வேத வாக்கியங்கள் மறுக்கின்றன. மீமாம்சகர்கள் இக்கொள்கை யுடையவர்கள். கடவுளே இவ்வுலக இயக்கத்திற்குக் காரணம் என்பதை அவர்கள் மறுகிருர்கள். அவர்களுடைய நாத்திக வாதம் தற்கால நாத்திகம் போன்றுள்ளது. முற்காலச் சாங்கிய வாதத்தின் பெயரே நிரீச்சுர சாங்கியம். அதில் கூறப்படும் புருஷன் உலக இயக்கங்களுக்குக் காரணம் மானவன். அன்று உலகத்தைப் படைத்துக்காத்து அழிக்கும் தொழிலும் அவனுடையதன்று. பெளத்தம், சமணம், ஆஜீவகம் மூன்றும் கடவுள் கொள்கையை மறுப்பனவே. சங்கரரையே, பிற்கால ஆத்திகர்கள், நாத்திகரென்றும், பெளத்த தத்துவத்தை மாறுவேடத்தில் கூறுகிற பிரசன்ன பெளத்தர் என்றும் கூறுகிருர்கள். அவருடைய தத்துவப் படி ஒரே பொருள்தான் உண்மையான்து. அது பிரம்மம் மற்றவையெல்லாம் அறியாமையின் படைப்புகள். ஈசுவரன் 19ாயையின் படைப்பேயாகும். ஈசுவரன் உண்டென்பது 37%