பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியவகாரிக சத்தியம். அது விவகார உலகில் உண்துை. ஆனல் உயர்நிலை அறிவால் பொய்யென்று அறியப்படும்ே பழைய தத்துவங்களில் நியாய வைசேஷிகர்கள் தாம் தீவிர ஆத்திர்கள், பின்னர் சங்கரரது அத்வைதக் கொள்கைகளை எதிர்த்த பக்திச் சமயங்களான சைவம், வைணவம், துவைதம் முதலியவை கடவுளே பிரபஞ்ச நிகழ்ச்சிகளனைத் திற்கும் காரணம் என வாதாடின. இந்தியத் தத்துவங்களின் நாத்திகக் கொள்கையைத் தேவி பிரசாத் எழுதிய 'இந்திய நாத்திகம்’ என்ற நூலில் காணலாம். தமிழ் நாட்டு லோகாயதம் மேலும் ஆராயப் படுதல் வேண்டும். மருத்துவ நூல்களிலும், சித்தர் நூல்களின் சில பகுதிகளிலும், ரசவாத நூல்களிலும் இக்கொள்கை காணப்படும். மேலும் வைஷ்ணவ துவைத நூல்களின் பரபக்கக் கூற்றுகளை ஆராய்தல் வேண்டும். அப்பொழுது தான் தமிழ்நாட்டில் நிலவிய விஞ்ஞானக் கொள்கைகளின் அடிப்படைகள் நமக்கு விளங்கும். கட்டுரைக்குப் பயன்பட்ட நூற்கள் 1. சைவ சித்தாந்த சாஸ்திரம்-14 நூல்கள் சைவ சமாஜப் பதிப்பில் நூலாக வெளியிடப் பட்டன. (1934) புதிய வெளியீடு கழகப் பதிப்பு 2 பகுதிகள். > 2. சைவாகமங்கள்-ஆகமங்கள் மொத்தம் 28. உப ஆகமங்கள் 28. இவற்றில் 10 மட்டுமே சைவ ஆகமங்கள் இவை சமஸ்கிருதத்தில் உள்ளன. சில ஆகமங்களை மூலத்தில் பாண்டிச்சேரி இன்ஸ்டிடுட் டி பிரான்ஸ் வெளியிட்டுள்ளது. 3. மணிமேகலை, சமயக் கணக்கர் தம்திறம் கேட்ட காதை 4. சாருவாகன்-சிவஞான சித்தியார் உரை. 372