பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவர்களின் படையை ஸ்கந்தன் முறியடித்தான். தனது படை தோல்வியடைவதைக் கண்டு இந்திரன் தனது வஜ்ரா யுதத்தை அவன் மீது எறிந்தான். அது ஸ்கந்தனது விலாவில் பாய்ந்தது. அங்கிருந்து ஸ்கந்தனைப் போன்ற உருவமுடைய விசாகன் தோன்றினன். இவன் சக்தியின் அம்சம், இந்திரன் இதனைக் கண்டபின் போரை நிறுத்தி ஸ்கந்தனோடு சமாதானம் செய்துகொண்டான். தேவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இதன் பின்னர் தேவசேனை என்னும் தனது வளர்ப்புமகளை இந்திரன் ஸ்கந்த னுக்கு மனம் செய்வித்தான். இது தவிர வேறு இரண்டு செய்திகளையும் மகாபாரதம் கூறுகிறது. ஒன்று : பிறக்கிற ஆண்பிள்ளைகளையும் பிறக்கு முன்பே கருவாகவிருக்கும் ஆண்பிள்ளைகளையும் ஸ்கந்தனும் விசாக லும் தூக்கிச் சென்று படையில் சேர்ப்பார்கள். இவர்கள் தவிர ஸ்கந்தனையும் விசாகனையும் தந்தையாக ஏற்றுக் கொண்ட வலிமை மிக்க இளம் பெண்கள் ஸ்கந்தனுடைய 'மாத்ருகணம்” என்று குறிப்பிடப்படுவர். இவர்கள் பல குழந்தைகளைப் பெற்ருர்கள். அவர்களில் நல்லவர்களும் உண்டு, தீயவர்களும் உண்டு. - . . . ஸ்கந்தனது உருவத்தை இப்புராணங்கள் வருணிக் கின்றன. பொன்னிறமாகவும் சிவப்பு நிறமாகவும் அவன் உடல் இருக்கும், உடைகளும், அணிகலன்களும் செந்நிற மாகவே இருக்கும். இவனைச் சூரன் என்றழைப்பார்கள். இலக்குமி இவனே வணங்கிள்ை. ஆறுநாட்கள் இரவில் பிறந்ததற்காக இவனை ரிஷிகள் வணங்குகிருர்கள். உலகத்தைக் காப்பாற்ற இவனே இந்திரளுக வேண்டுமென அவர்கள் விரும்பினர்கள். இந்திரனது ஆட்சியின் வலிமை யின்மையைக் கூறி, ஸ்கந்தனையே இந்திரனுக்கும்படி ஒரு சமயம் தேவர்கள் வேண்டிக் கொண்டார்கள். இந்திரனும் அவ்வாறே விரும்புகிருன். ஆனல் ஸ்கந்தன் அதனை மறுத் துரைக்கிருன். இந்திரனேயே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இதி.