பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படி வேண்டிக்கொண்டு தான் தேவ சேனபதியாகப் பதவி ஏற்று தேவர்களின் பகைவர்களை அழித்து விடுவதாக உ றுதி கூறுகிருன். தேவசேனபதியாக ஸ்கந்தன் பதவியேற்கும் பொழுது சிவன் முதலிய தேவர்கள் அவனைப் பணிந்து புகழ்ந்தார்கள், இத்திரன் அதன் பின்னர் தேவசேனயை அவனுக்கு மணம் செய்து வைக்கிருன். பூரீநிவாலி என்ற பெயரும் இவளுக்கு உண்டு. இவளேயே லட்சுமி எனக் கருதுவாரும் உளர். - இதன் பிறகு பெரும்புகழ் பெற்று விட்ட ஸ்கந்தனை தமது மகளுகச் சுவீகரித்துக் கொள்ளப் பல பெண் தெய்வங்கள் முன்வருகின்றன. முதலில் வளர்த்த கிருத்திகை களும் பிறகு வினிதா குரோத சமுத்பவா என்ற பெண் தெய்வங்களும் முருகனது தாய்மார்களாகிருர்கள். பிராம்மி, மஹேஸ்வரி முதலிய பழைய தாய்மார்களுக்குப் பதில் புதிய தாய்மார்கள் ஸ்கந்தனுக்குத் தோன்றுகின்றனர். இத்தாய்த் தெய்வங்களுக்குத் தனது சக்தியையளித்து குழந்தைகளைப் பிடிக்கவும், துன்புறுத்தவும், குணப்படுத்தவும் ஸ்கந்தன் சக்தியணிக்கிருன். துன்பம் செய்யாமலிருப்பதற்காக இப் பெண் தெய்வங் களுக்குப் பலிகொடுத்துத் திருப்தி செய்யவேண்டும். இவை தம்மை வணங்குவோருக்கு வரமளிக்கும். ஆளுல் இவை ஸ்கந்தனின் பக்தர்களைத் துன்புறுத்தும் சக்தியுடையவை யல்ல, தாய்மார்களே தனயனிடம் வரம் கேட்கின்றனர். சுவாஹா, அக்கினியை இணைபிரியாதிருக்கும் வரம்கேட்டுப் பெறுகிருள். அக்கினியோடு சேர்ந்து வணங்கப்படும் பதவி பெறுகிருள். - இதே கதையை மஹாலேனனிடம் (ஸ்கந்தனிடம்) பிரம்மா மாற்றிக் கூறுகிருன். ஸ்கந்தன் அக்கினி புத்திரன் 36