பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதற்குப் பதில், ருத்திரபுத்திரன் என்று பிதாவின் பெயரை மாற்றிக் கூறுகிருன். இதல்ை சுவாஹா, உமையோடு ஒன்ருக்கப்படுகிருள். இதற்குப்பின் தான் தைத்திய சேனையோடு போராடி சூரனை வதைக்கிருள். இக்காலக் கதைகளில்:வள்ளி திருமணம் இல்லை. அது பிற்காலத் தமிழ், வடமொழி இலக்கியங் களிலேயே காணப்படுகின்றன. இக்கதைகளில் பல இனக்குழு மக்களின் கதை மரபுகள் இணைக்கப்பட்டுள்ளன. தாய்வணக்கம் இருந்த காலத் திலிருந்து இக்கதை தோனறியுளளது. முதலில் பிராம்மி மஹேஸ்வரி முதலியவர்களின் மகனக ஸ்கந்தன் கருதப் பட்டான் என்பதைப் பழைய தாய்மார்களே மாற்றி புதிய தாய்மார்களாகக் கிருத்திகை தெய்வங்களையும், வினிதா முதலிய மூர்க்க தேவதைகளையும் ஸ்கந்தன் ஏற்றுக் கொண்டதாகப் பாரதக்கதை கூறுகிறது, இது பழைய தாய் வழிச் சமுதாயக் கதையின் அம்சம் என்ப்து தெளிவு.இன்றைக் கும் சில இனக் குழுக்களில் புதியவர்களைச் சுவீகரித்துக் கொள்ள வயதான பெண்களின் மடியில் உட்கார்ந்து தாய்பால் குடிப்பது போலப் பாவனை செய்யவேண்டும். இந்திரன் பழைய வேதப் பழங்குடிகளில் சிறு இனக்குழுத் தலைவர்களின் சாயலில் இந்திர லோகத்தில் குழுத் தலைவனுகப் படைக்கப்பட்டவன். வேத காலத்தில் மிகப் பிரபலமடைந் திருந்த இவன் செல்வாக்குக் குன்றியவன் ஆளுன். ஏன்? குழுக்கள் (சிறு மாடுமேய்க்கும் குழுக்கள்) பெரியவை ஆயின. சில குழுக்கள் கல் கருவி நிலையினின்றும் : உலோகக் கருவி நிலை"க்கு முன்னேறின. அப்பொழுது அவர்கள் கருத் துலகிலும் மாறுதல் தேவையாயிற்று. இந்திரன் கிழவனகி விட்டான். சிறு குழுத் தலைவன், பெருங்குழுவைப் பாது காக்கும் வலிமையற்றவனுகக் கருதப்பட்டான். பெருங்குழு பல குழுப்போர்களில் (Tribal Wars) ஈடுபட வேண்டிய தாயிற்று. அதற்கேற்றபடி, உடல் வலிமையும், இளமையும் போர்த்துடிப்பும், சிறந்த போர்க்கருவிகளும் உடைய படை யும், அதனைக் களத்தில் நடத்துவதற்குத் தலைவனும் 37