பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைவில் தேவையாயின. கருத்து உலகில் இதன் பிரதிபலிப்பாக இந்திரனுக்குப் பதிலாக ஒரு போர்க்கடவுள் தேவையாளுள். அவனத் தமதி கதைகளில் படைத்தார்கள். அவனுக்குக் குணமாகத் தீயின் வெம்மையையும், நீரின் வேகத்தையும் கற்பனை செய்து, நீரையும், (கங்கையையும்) தீயையும் தாயும் தகப்பனும் ஆக்கிக் கதை புனைந் தனர். அதற்கு இந்திரளுேடு உறவு உண்டாக்க இந்திரனது மருமகளுக்கினர். இந்திரனைவிட வலிமை வாய்ந்தவன், ஆளுல் இந்திரன், தேவசேனபதி என்று வேறுபாடு காட்ட ஆயுதங்களில் வேறுபாடு காட்டினர். இவ்வேறுபாடு கதை களில் இந்திரன் கருத்து முந்தியது, ஸ்கந்தன் கருத்து பித்தியது என்பதைக் காட்டும். இந்திரன் ஆயுதம், வச்சிராயுதம், ததிசி முனைவரின் எலும்பில்ை உருவானது. அது மலைகளின் இறகுகளை வெட்டி எறிந்தது. ஆனல் பெரும் பாறைகளைப் பிளந்ததாகக் கதைகள் இல்லை. ஸ்கந்தனை உலோகங்களோடு தொடர்பு படுத்தினர். உலோகங்களாக, அக்கினியின் வித்து மாறியதை இராமாயணக்கதை கூறியதை நாம் முன்னர் கூறினேம். பின்பு சிவனது வில்லும் அம்பும், சூலமும் ஸ்கந்தனது கருவிகள் ஆயின. அவை உலோக காலத்தவை. செம்பும் இரும்பும் தோன்றியபின் செய்யப்பட்டவை. இவை எலும்புக்கருவியான வஜ்ராயுதத்தைவிட வலிமை மிக்கவை. திரிசூலத்தால் கிரவுஞ்சகிரியை ஸ்கந்தன் பிளந்தான். இது புதிய கருவியின் சக்திக்குச் சான்று. மகாபாரதக் கதையில் அக்கினியே ஸ்கந்தனது தந்தை. ஆளுல் பிற்காலக் கதைகளில் அக்கினியின் முக்கியத்துவம் குறைந்து ருத்ரனது முக்கியத்துவம் அதிகப்பட்டு ருத்ரனே ஸ்கந்தனது தந்தையாக்கப்படுகிருன். பேய்க்கணங்களும் சிவ கணங்களாகின்றன, - தாங்க் தெய்வங்களுக்கும், ஸ்கந்தனுக்கும் உள்ள தொடர்பும், மாத்ரு கணங்களுக்கும் ஸ்கந்தனுக்கும் உள்ள தொடர்பும், கிரஹாக்களுக்கு ஸ்கந்தன் விசாகனுக்கும்