பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்பும் மாத்ரு கணங்களுக்கும் குமார கணங்களுக்கும் உள்ள ஸ்கந்தனுக்கும் உள்ளதொடர்பும் செந்திறத்திற் கும். சிவப்பு உடைகளுக்கும் ஸ்கந்தளுேடு உள்ள தொடர்பும் இவன் இனக்குழுச் சிறு தேவதைகளில் ஒன்ருக இருந்து பெருந்தெய்வமானவன் என்பதைப் புலப்படுத்தும் சான்றுகளாகும். இவ்வளர்ச்சி நிலையில் இக்கதைகள் கி. பி. முதல் நூற்முண்டு ஆரம்பத்தில் தமிழ் நாட்டின் வடபகுதியில் பரவ ஆரம்பித்தது. காளிதாஸன் குமாரசம்பவம் எழுதி, அந்நாடகம் பிரபல மெய்திய காலம் முடிய தமிழ் நாட்டின் வடபகுதியான பல்லவர் நாட்டில் பரவி, உள்நாட்டுப் பண்பாட்டுக் கருத்துக்களோடு இவை இணைந்தன. அக்காலத்தில் தமிழ்நாட்டின் சமுதாய-பண்பாட்டு நிலையைச் சுருக்கமாக வருணிக்கலாம். சமுதாய இயக்கத் தின் திசை வழி இனக் குழுக்கள் பல இணைந்து நிலத்தில் நிலையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்றன. ஆற்ருேரங்களில் பெருமளவில் நிலங்களில் நீர்பாய்ச்சி உழவுத்தொழில் சிறப்புற நடந்தது. மன்னர்களும், படைத் தலைவர்களும் நிலத்தைக் கைப்பற்றிக்கொண்டு தனி நில உடைமை முறையை உருவாக்கினர். பலவிடங்களில் தனியரசுகள் தோன்றின. பாண்டியர், ஆய், வேளுடு, கேரளர், சோழர், பல்லவர், களப்பிரர் ஆகிய அரசுகள் அக்காலத்தில் நிலைத்திருந்தன. கி. பி. 3-ஆம் நூற்ருண்டில் இவர்களிடையே பல போர்கள் நடைபெற்று பல்லவர்கள் ஆதிக்கம் பெற்றனர். வலிமையான படையால் 6 ஆம், 7ஆம் நூற்ருண்டில் வலிமையான பேரரசை அமைத்தனர். அப்பொழுது இதே நிலையில் உருவான பல பண்பாட்டுக் கருத்துகள் தமிழ் நாட்டில் நுழையும் பக்குவநிலை உண்டாயிற்று. இங்குச் சிறு தெய்வமாக இருந்த முருகனுக்குப் போர்க் கடவுள் என்ற தகுதி ஏற்பட வேண்டும். அதற்குரிய சில அம்சங்கள் அவனிடம் இருந்தன. சேவலுக்கு இருப்பது 39