பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்ற போர்க்குணம், வேலை ஆளும் திறமை, (நெடுவேள்) உடல் வலிமை மந்திர சக்தி முதலியன அவனிடமிருந்த தாகத் தமிழர் கற்பனை செய்திருந்தார்கள். Eسياسي(ت5لس வீரனுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுவிட்ட இக்காலத்தில் அவனுக்குக் கோவில்கள் கட்டினர். வள்ளியென்னும் குறமகளே அவன் முன்பே மணந்திருந்ததாக குன்றவர் தாட்டுப் பண்பாட்டு வழக்கு இருந்தது, நிலத்தையும் நிலத்தின் செழிப்பையும் தெய்வத்தின் மனைவியாக ஆக்கினர். (வள்ளி-கிழங்கு. திரு-உழுத பள்ளம்) ஆனல் அக்கினியைப் போற்றி வணங்கும் பண்பாடு தமிழ் நாட்டில் சிறிதளவே யிருந்தது. தாய்த்தெய்வு வணக்கம் இருந்தது. சிவலிங்க வணக்கமும், உருவமுள்ள சிவ வணக்கமும் இருந்தன. எனவே அக்கினியம்சமாக ஸ்கந்தன் கருதப்பட்டாலும் அவனுக்குத் தாயும் தகப்பனும் தேவை. கொற்றவை, பழையோள், காடுகாள், ஐயை ஆகிய தாய்த் தெய்வங்களோடு, வடநாட்டு கிருத்திகை, உமை, வினிதா, குரோதபாவிகா முதலிய தெய்வங்களே இணைத்துப் பலதாய்களை அவனுக்குக் கற்பித்தனர். அவன் யார் வயிற்றிலும் பிறக்கவில்லை. - தகப்பன் பிரச்சினையையும் சுலபமாகத் தீர்த்தனர். அக்கினி, ருத்திரன் வழியாக காலவட்டத்தில் சிவன் ஸ்கந்தனது தந்தையாளுன் என்பது வடநாட்டுப் பண் பாட்டு மரபு, அக்னி ருத்ரனும் இங்குப் பெருவழக்கில்லாத தெய்வங்களாக இருந்தமையின் நேரடியாகவே முருகனே சிவளுேடும், மகேஸ்வரளுேடும் இணைத்து விட்டனர். இங்குப் பல்லவர் காலத்தில் தோன்றிய ஒரு கதையையும், அதற்கேற்ப வடிக்கப்பட்ட சிற்பத்தையும் சான்ருகக் காட்டலாம். 'தொண்டை நாட்டில் கி. பி. 6,7 ஆம் நூற்ருண்டில் எழுந்த சிற்பங்கள் அதற்கு முன்னரே குகைப் புடை சிற்பங்களாக 4,5 ஆம் நூற்ருண்டிலேயே தோன்றி விட்டன. எனவே நாம் ஆராயும் காலமாகவே, அதாவது ஸ்கந்தனப் பற்றிய வட நாட்டுக் கருத்துக்கள், பல்லவர் ${}