பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிப் பகுதிகளின் வழியே தமிழ் நாட்டில் நுழைந்த காலம். இந்தச் சிற்பம் பிட்சாடனர் சிற்பம். நடுவில் நெடுவேலைப் போல உயர்ந்த அழகிய உருவம் பிச்சை ஏற்கும் கலத்தோடு அம்மணமாக நடக்கிறது. கீழே ஒரு குள்ளப் பூதமும், மானும் நிற்கின்றன. இடதுபுறம் 7 பெண்கள், உடை குலைந்து மார்புகளைக் காட்டிக் கொண்டு, முகத்தின் வெட்கம் தோன்ற நிற்கின்றனர். இதைப் பற்றிய கதை. சப்தமுனிவர்கள் இறைவனை ஏற்கவில்லை, அதனால் அவர்களது அகம்பாவத்தைப் போக்க இறைவன் முடிவு செய்தான். அவர்கள் இல்லாத சமயம் அவர்கள் பர்ணசாலைப் பக்கம் அம்மணமாகச் சென்ருன். பிட்சை யெடுப்பவர் போல மாறுவேடம் தரித்து ஏழு ரிஷிபத்தினி களையும் கண்டான். அவர்கள் அவன்மீது மோகம் கொண்டு ஆடை குலைந்து, காமவேட்கை முகத்தில் தோன்ற ஓடி வந்தனர். அவர்களைக் கண்டதும் வெளியேறிய வித்தை உமை எடுத்து சரவணப் பொய்கையிலிட்டாள். ஸ்கந்தன் தோன்றினன். இது ஆறுமுறை நிகழ்ந்ததாக அக்கினி கதையில் கூறப்பட்டுள்ளது போலவே தமிழ் நாட்டில் முருகன் தோற்றம் பற்றிய கதைகளும் கூறும். நாம் மேற்கூறிய கருத்தையே இக்கதையும் வலியுறுத்தும். அக்கினி வணக்கம் அருகியிருந்த இந் நாட்டில், புகழ் பெற்று வரும் ஸ்கந்தனை அக்கினி குமாரளுக அறிமுகப்படுத்துவது பொருந்தாது. புகழ் பெற்ற தந்தையை அவன் பெற வேண்டும். அதற்காகப் புராணிகர்கள் தமிழ் நாட்டின் *பிறவா யாக்கைப் பெரியோன்' "நாற்றவுண்டிக் கடவுள்' 'ஆலமர் செல்வன்” “நஞ்சுண்டு கருத்த கண்டான்” என்று முற்சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டவரும் தொகை நூல்களின் கடவுள் வாழ்த்தில் போற்றப்படுபவருமான சிவனையே முருகனுக்குத் தந்தையாக்கினர். இவ்வாறு தமிழ் நாட்டு முருகக் கருத்தும், கங்கைச் சமவெளி ஸ்கந்தக் கருத்தும் இணைந்து ஒன்ருயின. - இந்நிலையில் தான் ஸ்கந்தப் பண்பாடு இங்கு முருக வணக்கத்தோடு இணைந்து ஒன்றுபடுவதை, 3ஆம் நூற்ருண் 31