பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிற்கும் 7ஆம் நூற்றண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அறிகிருேம். பல்லவ அரசர்கள் தங்களைத் தெய்வ பரம்பரை, சிலதிபரம்பரை என்று வருணித்துக் கொள்ளும் போது ஸ்கந்தனுக்கும் பரம்பரை ஊகித்தறியப்பட்டது, ஸ்கந்தன் அரச வம்சத்தினரால் பெரிதும் மதிக்கப்பட்டான் என்பது அவர்கள் ஸ்கந்த சிஷ்யன், குமாரசிஷ்யன் என்ற பெயர்களேத் தாங்கியிருந்ததே காட்டும். . முருகனைப் பற்றிய வருணனைகளைப் பரிபாடல்களிலும், திருமுருகாற்றுப்படையிலும் பெறு கிருே ம். அதற்கு முன்னர், முருகனைப் பற்றிய முந்திய இலக்கியங்கள் குறிப்பிடுவதை நினைவு கூர்வோம். முருகன் குறிஞ்சிக் கடவுளரில் முக்கியமானவன். வள்ளி என்ற குறமகள் மனத்தன். அல்லது நிலத்திருவான வள்ளியை மணந்தவன் தனிக்கோயில் அவனுக்குத் தோன்றத் தொடங்கியிருந்தது. ஆட்டுக் குட்டியின் உதிரத்தோடு பிசைந்த தினமாவை அவனுக்குப் பலியாகப் படைப் பார்கள். வேலன் என்ற தன் பூசாரி மீது ஆவியுருவில் ஏறி முருகன் குறி சொல்லுவான். நோய் கொண்ட பெண் களுக்கு எதளுல் நோய் வந்தது என்று காரணம் கண்டு பிடித்து சொல்லப் பெற்ருேர்கள் வேலனை அழைப்பர். அவன் பழங்குடி மக்களின் பூசாரிகள் போல் (Priest) வெறி யாடிக் குறி சொல்லுவான். குறிசொல்ல அவன் உள்ளத்தை இயக்கும் தெய்வம் முருகன் என்பது பழங்குடித் தமிழ் மக்களின் நம்பிக்கை. அகம், புறம், ஐங்குறுநூறு, நற்றிணை முதலிய முற் காலச் சங்க நூல்களில் மேற் கூறிய செய்திகள் காணப் படுகின்றன. அந்நூல்களுக்குப்பின் தோன்றிய தொல் காப்பியம், அவற்றுள் காணப்படும் பொருள் பாகுபாடு களுக்கும், செய்யுள் யாப்பிற்கும் இலக்கணம் கூறுகிறது. அந்நூலில் சேயோன் மேய மைவரை உலகம்’ என்ற சொற்ருெடர் மலையிலும் மலேச்சாரலிலும் வாழும் மக்களுக்குச் சேயோன் தெய்வமென்பது கூறப்படுகிறது,