பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவப்பு நிறத்தை இத்தெய்வத்தோடு தொடர்பு படுத்துவது இச் சான்றுதான். அதற்கு முன்பு தோன்றிய இலக்கியங் களில் இந் நிறக்குறிப்பு இல்லை. இது தீயையும் சூரியனையும், இரத்தத்தையும் நினைவுபடுத்துகிறது. அக்குணங்களே தொல்காப்பியத்திலும் சேயோன்' 'செவ்வேள்” என்று சொல்லப்படுகிறது. குறிஞ்சித் தெய்வமான இவனே பின்னர் பாலைக்கும் தெய்வமாகக் குறிப்பிடப்படுகிருன். எனவே பூகோளப் பகுப்புகளைக் கடந்து மக்கள் சமுதாய வளர்ச்சியில் சில பண்புகளைப் பொதுவாகக் கொண்டு இக் கடவுளின் வணக்கமென்னும் பண்பாடு வளர்ச்சி பெற்றது. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்தில் பாடப்பெறும் சிறப்பு முருகனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்படும் முருகன் வேலைக் குன்று பிளந்து போகும்படி எய்தவன் என்று கூறுகிறதே அன்றி, அவன் வடிவை வருணிக்காவிடினும், கிரவுஞ்ச கிரியைப் பிளந்த செயல் மஹாபாரதத்தில் முருகன் பிறப்பு பற்றி கூறும் பகுதிகளில் சொல்லப் பட்டுள்ளது. குறுந்தொகைக் குறிப்பு அதைப் பின் பற்றியதே என்று உறுதியாகக் கூறலாம். சேவல்தான் முதன்முதலில் காலத்தால் முந்திய நூல் களில் முருகனது அடையாளம். இது ஒர் இனக் குழுக்குறி. (Totemic symbol) Louis Losśr@sigmrgir வருகிறது. இவையிரண்டின் தோற்றம் பற்றிய கதை களும் சூரன்வதையும் பிற்காலத்து வடமொழி இலக்கியச் சான்றுகளில் கிடைப்பனவே. முருக வணக்கக் குழுவொன்று முதன்முதலில் சேவலைத் தனது குழுவின் குறியாகக் கொண் டிருந்து பின்னர் மயிலைக் குழுக்குறியாகக் கொண்ட குழுவை வெற்றி கொண்டிருக்கலாம். இதுபோல வேறு இனக்குழுக் குறிகளான நாகம் முதலியவற்றையும் இவ்வாறே தோல்வி யடைந்த குழுக்களின் குறிகளாகவே கொள்ளலாம். அசுரரைக் கொன்றது, அவுணரைக் கொன்றது, சூரனைத் தடித்தது, மலையைப் பிளந்தது போன்றவை, வடமொழிச் சான்றுகளிலிருந்து தமிழ் இலக்கியத்திற்கு வந்தனவென்றே தோன்றுகின்றன. ஏனெனில் மிக முந்திய சான்றுகளில்