பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரர், அவுணர் கதைகள், குன்றெறிந்த கதை ஆகியவை தமிழிலக்கியங்களில் இல்லாமல் வடமொழி இலக்கியங் களிலேயே கிடைக்கின்றன. பெரும்பாற்ைறுப்படையிலும், முருகாற்றுப்படையி லும் குரனைக் கடவுள் மாய்த்த கதை உள்ளது. இக்கதை வடமொழி பாரதக்கதையோடு இங்கு வந்ததாகத் தெரி கிறது. முருகன் தாய்த்தெய்வத்தினின்று பிறந்த செய்தி தமிழ் நாட்டுக்கேயுரியது. வடநாட்டுச் சான்றுகளில் ஸ்கந்தன் ஆணின் வித்தினின்றும் பெண்ணின் கருப்பையின் உதவியின்றியே தரையில் பொய்கையருகில் சிசுவாக உருவானவன். வளர்த்த தாயார்தான் அவனுடைய தாயார் என்று உரிமை கொண்டாடியவர்கள். பரிபாடலில் தேவசேனை, வள்ளி சகக்கிழத்தி ஏசல் காணப்படுகிறது. தமிழ் நாட்டில் முருகனுக்கு வள்ளி கட்டும்தான் 5ஆம் நூற்ருண்டுக்குமுன் மனைவியாக இருந் தாள். ஸ்கத்தக் கருத்து இங்கு வந்தபிறகு அவன் மனைவி வான தேவசேனவும், முருகனது மனைவியாகக் கருதப் பட்டாள். முடிவில் முருகனைப் போன்ற தெய்வங்கள் உலக முழு வதிலும், பழங்குடி மக்கள் நிலையிலிருந்த சிறு குழுக்கள், திகிலத்த நாகரிகமடையும்போது உலோக உபயோகத்தைக் கற்றுக்கொண்டு பெருங்குழுக்களாக மாறும் காலத்தில், இளமை, வலிமை, போர்த்திறன், காதல் இயல்பு, இயற்கையை வெல்லும் திறன், (தீயையும் நீரையும் அடக்கு பவன்) இதுபோன்ற தன்மைகளே உருவான கடவுள்களை மக்கள் கற்பனை செய்துள்ளார்கள், சமூக வளர்ச்சியின் ஏகதேச ஒற்றுமையால் தமிழ்நாட்டு முருகக் கருத்து வளர்ச்சி பும் ஒப்பிடத் தக்கனவாயுள்ளன. இவையிரண்டிற்கும் சில வேற்றுமைகளும் இருக்கின்றன. இவை இணையும் பொழுது வேற்றுமை அம்சங்கள் மறைந்து, ஒற்றுமை அம்சங்கள் ஒன்ருகி ஒரேவிதமாக கடவுள் கதைகள் உண்டாயின. இந்த இணைப்புக்கடவுளின் சித்திரத்தைப் பிற்காலக் கந்தபுராணம் தமக்களிக்கிறது. . .