பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் முருக வணக்கம் (இக்கட்டுரை முருகஸ்கந்த இணைப்பு என்ற கட்டுரையோடு சேர்த்து படிக்கப்பட வேண்டும். இக்கட்டுரைக்குரிய சிந்தனை அடிப்படைகளே 'முருக ஸ்கந்த இணைப்பில் காணலாம். பரிபாடல் இருவகையான முருக வணக்கத்தை விவரிக்கிறது. அதில் பாமர மக்களின் அதாவது தமிழ் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வணக்க முறையை ஒதுக்கி விட்டு, கோவிலில் முருகன் வழி படப்படும் முறையையே குறிப்பிட்டு, பிற்கால சைவ சித்தாந்தக் கருத்துப்படி முருகனே உலக இன்பத் தோடு தொடர்பில்லாதவளுகவும் துறக்கம் அருளு பவளுகவும் சைவ சமயப் பற்றுடைய ஆசிரியர்கள், தற்காலத்தில் எழுதியுள்ளார்கள். த ற் கால ஆசிரியர்கள் கருத்துத்தான் அது; பரிபாடல் கருத்து அதுவல்ல. முருக வணக்கத்தின் இரு கூறு களில் கடம்ப மரத்தையும் வேலையும் வழிபடுவதும் வேலனுட்டமும் பண்டைத் தமிழர் வழிபாட்டு முறையெனவும், கோவில் வழிபாடும், முருகன் பிறப்புக் கதைகள், வடமொழிப் புராணக் கதை களிலுள்ள ஸ்கந்தனும், முருகனும் தமிழ் மக்கள் பண்பாட்டில் இணையப் பெற்ற பின் எழுந்த கருத் தென்றும் கட்டுரையில் விளக்கியுள்ளேன். ஆர்.1 பரிபாடலில் எழுபது பாடல்கள் இருந்ததாகப் பிற்காலச் செய்யுள் ஒன்று கூறுகிறது. ஆனல் இன்று இருபத்திரண்டு பாடல்கள் முழுமையாகவும். சில பாடல்கள் பகுதியாகவும் 象5