பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடைக்கின்றன. பரிபாடலில் கடவுள் வாழ்த்து நூலின் உள்ளே கருப் பொருளாகக் காணப்படுகிறது. அகம், புறம், ஐங்குறுநூறு முதலிய முற்கால நூல்களில், நூலின் உள்ளே காணப்படும் கருப் பொருள்கள் அகமும், புறமுமே. இவை இரண்டும் மனிதர்களுடைய செயல்களையும், சிந்தனைகளை பும், உணர்ச்சிகளையும் குறிப்பவை. இச்செய்யுள்கள் தொகுக்கப்பட்டு நூல்களாக உருவம் பெறும்பொழுது நூலின் முகப்பில் கடவுள் வாழ்த்து இணைக்கப்பட்டதென்று வையாபுரிப் பிள்ளே கூறுகிரு.ர். பரிபாடல் தொகுக்கப்படு முன் அவை தொகுக்கப்பட்டிருக்க வேண்டுமென பாடல் களின் கருத்து வளர்ச்சியைக் கருதி அவர் முடிவுக்கு வருகிருர் பரிபாடலில் கடவுள் வாழ்த்து கருப் பொருளாக வரும் பாடல்கள் உள்ளன. - - தொல்காப்பியர் இலக்கணம் வகுக்கும் பொழுது பரிபாடல் பாட்டுக்கள் காமப் பொருள் பற்றியே இருந்தன வென்பது அவர் இயற்றிய விதிகளிலிருந்து தெரிகிறது. காமத்திற்கு, முத்திய நூல்களில் மானிடரே கதை மாந்தர்கள். கடவுளரும் காம நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அல்லர் என்று தொல்காப்பியர் கருதிய போதிலும், பரிபாடல் காலம் வரை, கடவுளர் காமம் இலக்கியத்தின் பொருளாக வில்லை. பிற்காலத்திலேயே மானிடரைப் போலவே கடவுளரும் உலகாயத நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவதாக இலக்கியங்கள் கூறுகின்றன. பரிபாடலில் செவ்வேள் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன. அதனைக் கண்ட பிற்காலத்தவர். கடவுள் பற்றிய தம் காலத்துக் கருத்துக்கள் பரிபாடலில் உள்ளன என்று கருது கின்றனர். தேவார காலத்தும், காவிய காலத்தும், சோழர் காலத்திற்குப் பின்னர் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் உருவான காலத்தும் எழுந்த நூல்களின் வளர்ச்சியற்ற கருத்துக்களே, பரிபாடல் செவ்வேள் வாழ்த்துப் பாடல்களில் கான முயன்துள்ளார்கள். 證部