பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதற்கு உதாரணமாக சைவ சித்தாந்தக் கழகம் வெளி யிட்டிருக்கும் பரிபாடல் நூலுக்கு உரை யெழுதிய சோமசுந்தரஞர், கடவுளைப் பற்றிய உயர்ந்த கருத்துக்களே யும், வீடுபேற்றுக் கருத்தையும், உலக இன்ப மறுப்புக் கருத் தையும் பரிபாடல்-செவ்வேள் வாழ்த்துப் பாடல்களில் காண்கிரு.ர். அவர் நூலின் முகவுரையில் கூறுவதாவது: இனி இப் பரிபாடலின்கண் பண்டைத் தமிழ்ச் சான்ருேர் கொண்டிருந்த கடவுளைப் பற்றிய உயர்ந்த கொள் கைகள் பலவற்றையும் காணலாம், கற்றதனுல் ஆயபயன் வாலறிவன் நற்ருள் தொழுதல்” என்ற சீரிய தமிழ்ச் சான்ருேர், இசை கெழுமிய இப் பரிபாடலை அவ்வாலறிவனைத் தொழுவதற்குச் சாதனமாக்கிக் கொண்டது பொருந்துவ தாகும். "அங்ங்ணம் வனங்குதல்தான் எற்றுக்கெனில் பொன்னும், பொருளும் கருதியன்று. இவையெல்லாம் கனவெனத் தோன்றி அழியும். ஆதலால் அவையிற்றை வேண்டோம். யாம் வேண்டுவது என்றென்றும் அழியாது நிலைபெறும் வீட்டின்பமே அதனை அருள்க’ என்பதற்காகவே. (1) பழந்தமிழர் கடவுளைத் தொழுவதே வாழ்வின் - பயன் எனக் கருதினர்கள். (2) கடவுளை வீட்டின்பம் பெறவே பழந்தமிழர் தொழுதனர். (3) பொன்னும், பொருளும், போகமும் என்ற உலக இன்ப சாதனங்களே வேண்டிக், கடவுளேப் பழந் தமிழர் தொழவில்லை. என்று இவ்வாசிரியர் கருதுகிருர். இவை பரிபாடலில் செவ்வேள் வாழ்த்துப் பாடல்களில் காணப்படுகின்றன என்று சோம சுந்தரஞர் கூறுகிருர். த த-ே 37