பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால நம்பிக்கைகளை முற்கால நூல்களில் காண முயலலாம், செவ்வேள் வணக்க முறைகளைப் பரிபாடலில் இருந்து ஆராய்ந்து இல் வனக்கங்களுக்குப் பயனகப் பழந் தமிழ் மக்கள் எவற்றை எதிர் பார்த்தார்கள் என்பதையும், அவர்களது செவ்வேள் தெய்வக் கருத்து எத்தன்மையானது என்பதையும் அறியும் நோக்கத்தோடு இக்கட்டுரையை எழுதுகிறேன். - திருப்பரங்குன்ற முருகனை மதுரை மக்கள் வழிபட்ட வருணனைகள் உள்ளன. வழிபாடு செய்வோர் தமக்கு எவ்வெவ்வரங்களை வேண்டினர் என்பதும் கூறப்பட்டுள்ளது. அவற்றை ஆராய்ந்தால் செவ்வேள் வாழ்த்துப் பாடல்களில் 'வீடுபேறு வேண்டும் என்று வழிபட்டவர்கள், வேண்டினர் கனா என்பதை அறியலாம். திருப்பரங்குன்றில் இருவகை வழிபாட்டு முறைகள் வருணிக்கப்படுகின்றன. கோயிலில் சிலை உருவில் செவ்வேளை வழிபட்ட செய்தியோடு, கோயிலுக்கு வெளியே கடம்ப அசத்தடியில் வேலன் வெறியாட, பொதுமக்கள் வேலையும், கடம்ப மரத்தையும் வழிபட்டதும் கூறப்பட்டுள்ளது. மர வழிபாடும், வேல் வழிபாடும் உருவ வழிபாட்டிற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை என்பதை மானிட வியலார் விளக்கியுள்ளனர். இவ்விரு வழிபாடுகளிலும் மக்கள் எல்வெல்வரங்களே வேண்டினர் என்பதைத் தொகுத்து அக்கால மக்களின் கருத்து வளர்ச்சியையும், கடவுளுக்கும் மக்களது வாழ்க்கைக்கும் எத்தகைய தொடர்பு இருந்ததாக அவர்கள் கருதினர்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. மானிடவியல், உளவியல் பயிற்சியின்றி சைவ சித்தாந்த, தத்துவ அறிவால் மட்டும் முற்கால மக்களின் வழிபாட்டையும், கடவுளைப் பற்றிய அவர்களுடைய தம்பிக்கைகளையும் அறிந்து கொள்ள இயலாது. முதலில் கோயிலுக்கு வெளியே நடந்த முருக வழிபாட் டைக் கவனிப்போம். 密器