பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"காய் கடவுள் சேளம் செவ்வேள், சால்வ, தலைவனெனப் பேஎவிழவினுள் வேலனேத்தும் வெறியும் உளவே அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல." (பரிபாடல்-5ஆம் பாடல், 15.18) இவ்வடிகளில் காய் கடவுளின் மகன் செவ்வேள் என்று கூறப்பட்டுள்ளது. இதனை உரையாசிரியர்கள் சிவனென்று பொருள் கொள்ளுவர். வேலனது வாழ்த்து உண்மையும் அல்ல, பொய்யு மல்ல என்று ஆசிரியர் கூறுகிருர். அதனல் அவர் செவ்வேளின் பிறப்புக் கதையை விரிவாகச் சொல்லி அதுவே உண்மை யென்று கூறுகிரு.ர். . இக்கதையாவது: உமையோடு புணர்ச்சி தவிர்த்த சிவனிடம், அவனது விந்தினை, இந்திரன் பெற்ருன். அதனின் றும் வலிமைமிக்க ஒரு சிறுவனப் படைக்க எண்ணினன். முழு முனிவர்களின் மனைவியர், கற்புக்கு இழிவுண்டாகும் என்றெண்ணி சிவனின் கருவைத் தாங்க மறுத்தனர். இந்திரன் சிவனது விந்தினத் தீயிலிட்டு, அதன் நீற்றை ஏழு பகுதியாக்கி கார்த்திகை மாதருக்கு அளித்தான். அருந்ததி அதனை உண்ண மறுத்தாள். மற்றைய அறுவரும் அதனே உண்டனர். அவர்கள் கருத்தரித்து உரிய காலத்தில் ஆறு குழந்தைகளைப் பதுமப்பாயலில் ஈந்தனர். குழந்தை இடி முழக்கம் போலக் கர்ச்சனை செய்தது. இதனைக் கேட்டு இந்திரன் வச்சிராயுதத்தை எறிந்தான். ஆறு குழந்தை களும் ஒர் உருவாகி இந்திரன எதிர்த்தது. இந்திரன் தான் வேண்டிப் பெற்ற குழந்தை இதுவென்றறிந்து குழந்தையின் சினம் தீர்த்து நட்புக் கொண்டாடினன். இக்கதையின் மூலம் இப்பாடல் இயற்றிய கடுவன் இள வெயினனர் முருகனைச் சிவனின் மகன் ஆக்கினர். ஆயினும் அவன் உமை வயிற்றில் பிறக்கவில்லை. தீயில் சுட்டெரிக்கப் பட்ட விந்திலிருந்து கார்த்திகை மகளிர்க்குப் பிறந்தவன். இத்தகைய பிறப்புக் கதைகள் பரிபாடலுக்கு முந்திய வடமொழி இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. தமிழ் நாட் 諡莎