பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டில் முருக வணக்கத்திற்குத் தோற்றமாயிருந்தது வேலன் வெறியாடல். இது ஓர் இனக் குழு வழிபாட்டு முறை யாகும். (Tribal Worship). இம்முறையை அகப்பொருள் இலக்கிய நூல்களில் காணலாம். காம நோயுள்ள மகளிருடைய நோய் இன்னதென்றறியாத தாய்மார்கள் வேலன் பழைத்து நோய்க்குக் காரணம் கேட்பார்கள். அவன் களம் வரைந்து, ஆடறுத்து, பூத்துளவி முருக வெறிகொண்டு ஆடிக் காரணம் சொல்லுவான். 'முருகின் குற்றம்,’ என்று கூறுவாளுனல் தாய் முருகனுக்கு விழாச் செய்ய சேர்ந்து கொள்ளுவாள். உண்மையான காரணத்தை உள்ளத் திலேயே மறைத்து வைத்திருக்கும் தலைவி, உண்மைக் காரணத்தை அறிய முடியாத வேலனையும், அவனது தெய்வ மான முருகன் பும் மடையர்கள்’ என்று கருதுவாள். தலைவியர் உலகியல் உண்மையை அறிந்தவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். வேலன் வெறியாடலை அவர்கள் மதிக்கவில்லை. - 'கடையன் மன்ற வேலன்' என்பன போன்ற சொற்ருெடர்களே, அகப்பொருள் இ லக் கி யங் களி ல் அாணலாம். ஆயினும் பழந்தமிழர்கள் தடைகளைத் தவிர்க்கவும், வெற்றி பெறவும், நோய் தீர்க்கவும், வேலன் வெறியாடி முருகு என்ற தெய்வ ஆவேசங்கொண்டு அவன் மொழிதலை நம்பினர் என்றே அக இலக்கியச் செய்திகளி விருந்து தெரிகிறது. - இத்தெய்வம் குறிஞ்சி நில மக்களது தெய்வம்.வேட்டை யாடும் மக்களது நம்பிக்கையில் அது வாழ்ந்தது. குறிஞ்சி நிலத்தில் தல்வர்கள் செல்வ விருப்பால், முல்லே நில மக்களின் மாடுகளைக் கவரச் செல்லும் பொழுது, அவர் களுக்கு வெற்றியளிக்கும் தெய்வமாக அவர்களால் வணங்கப் பட்டது. வேட்டைத் தெய்வம், வெற்றித் தெய்வமாக மாறிற்று. இத்தெய்வத்தை இனக் குழுக்களோடு போராடிய மன்னர்கள் வெற்றித் தெய்வமாக வணங்கினர். அதற்குமுன் அதற்குத் தந்தையின் பெயரில்லாமல் தாயின் பெயரே இருந்தது. பழையோள் சிறுவன், 辭馨