பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொற்றவை செல்வன் என்றே முருகன் பெயர்கள் வழங்கப் பெற்றன. அரசர்கள் ஆளுதிக்க ப ர ம் ப ைர ை ச் சேர்ந்தவர்கள். பிற்காலத்தில் அவர்கள் கொற்றவை மகளுன முருகனுக்கு ஒர் ஆண் பரம்பரையைத் தேடிஞர்கள். அத்தகைய பரம்பரையை அவர்கள் வடமொழி இலக்கி யங்களில் கண்டார்கள். ஆளுல் அங்கு முருகன் போன்ற தோர் போர்த் தெய்வம், அக்கினியின் மகன் என்று தான் கதைகளில் காணப்பட்டான். இக்கதைகளை "முருக வணக்கம்” என்ற எனது கட்டுரையில் ஆராய்ந்திருக்கிறேன். வடமொழிப் புராணங்களில் அக்கினி முக்கியத்துவம் இழந்து ருத்திரன் முக்கியத்துவமடைந்தபொழுது, பிற்காலப் புராணங்கள் அக்கினியின் புதல்வனை ஸ்கந்தனை ருத்திரனின் புதல்வளுக்கிவிட்டன. ஒரே கடவுள்' என்ற கொள்கை வடநாட்டுச் சமயங்களில் தோன்றியபொழுது ருத்திரன், சிவனது கூருகப் பாவிக்கப்பட்டான். சிவனது மகளுக ஸ்கந்தன் ஆகிவிட்டான். * : இந்தச் சிந்தனை வளர்ச்சிக் காலத்தில்தான் இக்கதைகள் தமிழ் நாட்டில் பரவின. அக்கதைகளில் ஸ்கந்தனுக்கிருந்த ஆண் பரம்பரையை, முருகனுக்கும் உண்டென்று கூறிப் புதிய புராணக் கதைகளைத் தமிழ் நாட்டுப் புலவர்கள். புனைந்தார்கள். இக்கதைகளில் போர்க் கடவுளான கொற். றவை சிறுவன், பைங்கட்பார்ப்பானின் (சிவன்) மகளுக ஆக்கப்பட்டான். - இப்பாடலில் காணப்படும் கதை இத்தகைய முயற்சி களில் மிகவும் முற்பட்டது. அதற்கு முன் கதைகளில்லாமல், சிவனின் மகளுக முருகனைக் கூறும் வழக்கம் சிறிதே இருந்தது. தொல்காப்பியர் காலத்தில் சிவம் பிரபலம் பெற்றிருக்க வில்லை. சேயோனே ஒரு நிலத்தின் தெய்வமாகக் கருதப் பட்டான். சிவன் சிறு தெய்வமாகவே இருந்தான். அவன் பிறவா யாக்கைப் பெரியோனுகவோ, தனிப் பெருங் கடவுளாகவோ கருதப்படவில்லை. எனவுே செவ்வேள் அவனது மகளுகக் கருதப்படவில்லை. 《塞