பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதன் பொருளாவது: அழகிய வடிவேலுக்கு மலரும், குழையும், துணியும் சார்த்தி வேலன் சுமந்து வருகிருன். அதன் மீது சாந்தமும், மணமும் பூசியிருக்கிறது. கடி மரம், என்ற கடம்ப மரத் தின் அடிப்பகுதியில் ஒர் ஆடு கட்டியிருக்கிறது. வழிபடுவோர் அம்மரத்தை வணங்கினர். தீவர்த்திகள் எரிந்தன. உணவும், மதுவும் நிரம்பப் படைக்கப்பட்டன. இவ்வழிபாட்டின் இன்பத்தைப் பெற விழா நடத்துபவர்கள் சுவர்க்கம் வேண்டும் என்ற ஆசை கொள்ளுவார்களோ? என்று விழா வெடுப்போர்எண்ணுகிரு.ர்கள். இவர்கள் வேலையும், கடம்பமரத்தையும், வணங்கி, வேலன் தெய்வமேறிக் கூறும் வாழ்த்தைக் கேட்கிருர்கள். இத்தகைய மகிழ்ச்சி பொங்கும் விழாக்களை நடத்த அவர் களுக்கு வேண்டியது செல்வமும், உணவும், உள்ளக் கிளர்ச்சி யும் ஆகும். அவர்களது தொழில் முயற்சிகளுக்குத் தடை வராமல் பாதுகாக்க அவர்கள் பழைய கருவி வணக்கம், மரவணக்கம் இவற்றின் எச்சங்களையும், குறிசொல்லும் மரபின் எச்சமான வேலனது வெறியாடலையும் விரும்பு கிரு.ர்கள். இவர்கள் மேலோர் உலகம்” எதனையும் விரும்ப வில்லை. வீடு பேற்றையும் விரும்பவில்லை. வேலும், கடம்ப மரமும், வேலன் மீதேறி வாழ்த்துக் கூறும் தெய்வமும், இத்தகைய விழாக்களை நடத்தும் நிலையில் தங்களைச் செல்வமும் மகிழ்ச்சியும் உடையவர்களாக வைத்திருக்க வேண்டுமென்பதே அவர்களது:விருப்பம். இவர்களது வணக்க முறைகளுக்கும் தற்காலத்தில் கிராமங்களில் சிறு தெய்வங்களுக்குச் செய்யும் ஊட்டு, கொடை, முதலிய விழாக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம். இன்னும் மரத்தின் மீது மஞ்சனே யைப் பூசி விழாச் செய்வோரும், வேலை நட்டு வழிபடு வோரும் உள்ளனர்.