பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பருடன் இன்புறலாம், இந்த விருப்பம் தோன்றுவதற்கு முன் அவர்கள் மனநிலையைக் கூறுகிரு.ர். திருப்பரங்குன்றத்தை வருணிக்கும் பொழுது, புலவர்கள் அதன் இயற்கைச் சூழலையும், அச் சூழலும், காம நுகர்ச்சி யும் மானிடர்க்கு அளிக்கும் இன்பத்தையும் கூறுகிருர்கள் 'ரத்தமை ஒழுக்கம் சிறப்பாகக் கூறப்படுகிறது. ஒரு தலைவன் களவுப் புணர்ச்சியைக் கற்பிலும் சிறந்தது என்று கூறுவதோடு அமையாமல், கற்பைச் சிறந்ததென்று கூறுவோர் பொருளிலக்கணத்தின் சிறப்பை அறியாத ரென்றும் கூறுகிருன். - எனவே இன்ப நுகர்ச்சியும், தெய்வ வழிபாடும் பரி பாடலில் முரண்பாடுடையவையல்ல. இன்ப நுகர்ச்சி நீடிக்கவும், உலகியல் பயன்களைப் பெறவுமே, மக்கள் வழிபாடு செய்கிரு.ர்கள். “துன்னித் துன்னி வழிபடுவதன் பயன் இன்னு மின்னும் அவையாகுக - தொன் முதிர் மரபினின் புகழினும் பலவே' என்று வழிபாடு செய்யும் பெண்ணைப் பற்றி உரையாசிரியர் குறிப்புக் கூறுவதாவது. என்பது பருவங்கண்டு அழிந்த தலைமகள் கேட்ட முருகவேளைப் பரவுவாளாய், இப்பருவத்தே தலைமகன் வருமென்பது படத்தோழி வற்புறுத்தியது” எனவே முருகனை வழிபட்டால் தனது காதலன் வருவான் என்று நம்பி அவள் முருகனைப் பாடினுள். முருக வணக்கம் பிரிந்த காதலரைச் சேர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை, அக்காலத்தில் இருந்ததென்று இக்குறிப்பு உணர்த்துகிறது. வேருெர் பாடலின் முடிவு வறுமாறு: அணிநெடுங் குன்றம் பாடுதும் தொழுதும் அவையாமும் எம் சுற்றமும் பரவுதும் ஏமி வைகல் பெறுகயாம் என்றே’ 45