பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுற்றம் என்று பண்டை நூல்களில் வழங்கும் சொல், காதல் மகளிரையும், மனைவியையும் குறிக்கும். வேறு அடைமொழியால் குறிக்கப்பட்டால் ஒழிய இச் சொல் ஒரு தலைவனது உரிமைச் சுற்றத்தையே குறிக்கும். நாசி'; எமது சுற்றமும் பாதுகாப்பான இன்ப வாழ்க்கை பெறுதல் வேன்மென வேண்டிக்கொண்டு, முருகனது குன்றத்தை வழிபடுவோர் பாடித் தொழுகின்ருர்கள். அங்கு, குன்றமே பாடவும், தொழவும் பெறுவது. குன்றையும், ஆற்றையும் பழங்குடி மக்கள் வணங்கி வந்ததையும், இன்றும் தற்காலப் பழங்குடி மக்கள் வணங்கி வருவதையும் வரலாற்று மும் காலம் பற்றிய ஆய்வுகளும், தற்கால இனக்குழு ஆய்வு களும் (Ethnology) நமக்கு அறிவுறுத்துகின்றன. இவர்கள் கேட்ட வரம் என்ன? தாமும் தம் சுற்றமும் பாதுகாப்புடைய இன்பவாழ்க்கை பெறுதல் வேண்டு மென்பதே. இது இவ்வுலக வாழ்க்கையையே குறிக்கு மென்பது, திருப்பரங்குன்ற வருணனையில் மக்கள் நிலை பற்றிக் கூறும்பொழுதே வெளியாகிறது. இவர்கள் இவ்வுலக வாழ்க்கையில்தாம் பாதுகாப்புக் கோருகிருர்கள். இன்பம் வேண்டுகிரு.ர்கள். பாடலின் காலம், சமுதாயம், வரலாறு முதலிய சூழ்நிலைகளை விடுத்து ஏமம், என்ற சொல் துறக்கம், மேலோர் உலகம், சுவர்க்கம், என்ற பொருளில் வந்துள்ளதாகச் சிலர் விளக்கம் கூறுவர். இவ்வுலக வாழ்க்கையைத் துன்பமென்று கருதுவோரே, இவ்வுலக வாழ்க்கை பொய்யென்று கருதி, வேருேர் உலகத்தில் இன்பம் இருக்கிறதென்று நம்புவர். ஆளுல் திருபரங்குன்றத்தில் வழிபட வருவோர் போகமும், பொருளும் பெற்று இவ் வுலகத்திலேயே இன்பமாக வாழ விரும்புவார்கள். அவர் களுடைய வேண்டுதலில் வேற்றுலகத்து வாழ்க்கையில் பாதுகாப்பு வேண்டும் என்ற சிந்தனையே தோன்ற முடி.காது. இந்திலையிலேயே ஏமம் என்ற சொல் காமம் இன்பம் என்ற பொருளின் வழங்கி வந்துள்ளது. (பாடல் 4, அடி 34, பாடல் 7 அடி 4.0) 46