பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஏமாக்க என்ற சொல்லும் இன்புற என்றும் பொருளில் வந்துள்ளது. எனவே இவ்வுலக இன்பத்தையே வழிபடுவோர் வேண்டினர் என்பதும், ஏமம் என்ற சொல் சுவர்க்கத்தைக் குறிப்பிடவில்லை என்பதும் தெளிவாகிறது. இனி முருகனது வீரத்தைப் புகழ்ந்து பாடி வாழ்த்தும் பாடல்கள் சில உள்ளன. அவையனைத்திலும் அவுணரை வென்றதைப் பொதுவாகவும், சூரனை வென்றதைச் சிறப் பாகவும் பாடுகின்றன. குருகை வென்றவன் என்றும், 'மாமுதல் தடிந்தோன்' என்றும் முருகன் புகழப்படுகிருன். 'சூர்' என்றும் ஓர் அவுனன் பெயர் கூறப்படுகிறது. பிற் காலக்கதைகளில் சூரபன்மா என்ற அசுரனேடு முருகன் போர் செய்யும் பொழுது அவுணன் பலவடிவங்கள் கொண்ட தாகவும் முடிவில் அவனைக் கொன்றதாகவும் புராணக் கதை கூறுகிறது. அக்கதையில்-சூரன் மாமரம், பறவை குன்ற முதலிய மாயவடிவங்கள் எடுத்ததாகக் கூறப்பட்டு உள்ளது.” - மாமுதல் தடிந்தவன் மாமரத்தை வெட்டியவன் என்பது பொருளாகிறது. குருகு ஓர் பறவை, அதனையும் அவன் கொன்ருன், பின்னர் குன்றெறிந்தவன்” என்ற சொற்ருெடர், ஓர் மலையைப் பிளந்ததைக் குறிக்கிறது. மானிடவியல் அறிவுகொண்டு இவற்றை ஆராய்ந்தால்' இவை, முருகனை வணங்கியவர்களது முற்கால இனக்குழு நினைவுகளின் எச்சம் என்று துணியலாம். பரிபாடற் காலத்தில் முருகனைத் தெய்வமாகக் கொண்ட மக்களின் முன்னுேர்கள் பல இனக்குழுக்களை வென்றிருத்தல் வேண்டும். அவர்களிடம் தோற்ற குழுக்களின் குலக் குறிகள் மாமரம், குருகு, குன்று முதலியனவாக இருந்திருக்கும். அவற்றில் தமிழ் நாட்டில் இருந்தனவற்றை ஒன்ருக்கி சூரபன்மாவின் பல மாயா உருவங்கள் என்று புராணக்கதை புனேயப் பட்டுள்ளது. ஒவ்வோரின மக்களும் தமது இனத்தின் முற் காலப்பகைவர்களை அசுரர்கள், அவுணர்கள் என்றழைப்பது 留