பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கம். வடநாட்டு இலக்கியப் படைப்பில் தோன்றிய ஸ்கந்தன், மயில், சேவல், பாம்பு முதலிய விலங்குகளோடு தொடர்புபடுத்தப் பட்டுள்ளான். இச்செய்தியை முன்னர் விளக்கிய மானிடவியல் கருத்துப்படியே பொருள் கொள்ளுதல் வேண்டும் முற்கால இனக்குழுக்களை வென்ற நினைவுதான் அப் பழைய இனக்குறிகளை அடையாளமாக முருகனேடு இணைத்துக்கொண்டதாகும். இதனைப் பரிபாடல் கதை பல தேவர்கள் தம் உடம்பிலிருந்து ஒவ்வொரு அடையாளத்தை யும் அளித்ததாகக் கூறுகிறது. முதலில் அக்கினி ஒரு யானை யைக் கொடுத்தான். குபேரன் தன் உடலிலிருந்து பிரித்து மயிலைக் கொடுத்தான். எமன் ஆட்டுக்கடாவை அளித்தான். இவையனைத்தையும் மேற் கூறியவாறே பொருள் கொள்ளு தல் வேண்டும். ஸ்கந்தனும், முருகனும் ஒன்ருக இணக்கப் பட்ட பொழுது, ஒன்றுபட்ட இத்தெய்வத்தின் அடை யாளங்களே, குலக்குறித் தொடர்பிலிருந்து, மானிட வரலாற்றுத் தொடர்பினின்று நீக்குவதற்காக இக்கதைகள் புனேயப்பட்டன. - முற்பட்ட வளர்ச்சி நிலையில் கடம்பமர்ந்தவனயும்,வேல் முகுகளும் இருந்த குழு மக்களின் தெய்வமான முருகன் களவுப் புணர்ச்சியின் காவல் தெய்வமாகவும் இருந்தான். இந்நிலையில் இருந்த வேலன் வெறியாட்டைப் பின்னர் மகளிர் வழிபாட்டு முறையாக மேற்கொண்டனர். குறிஞ்சி வாழ்க்கையில் களவுப் புணர்ச்சியும் திருமணமும் இருந்தன. எனவே குறிஞ்சி மக்களான குறவரின் தெய்வமான செவ்வேள், குதுப்பெண்ணையே களவுப்புணர்ச்சியில் மணந்து கொண்டான். அவன் ஸ்கந்தக் கற்பனையோடு இணைக்கப் பட்ட பொழுது, ஸ்கந்தனுக்கு ஒரு மனைவியிருந்தாள். அவள் இந்திரகுல் ஒர் அரக்கனிடமிருந்து காப்பாற்றப் பட்டு, வளர்க்கப்பட்டாள். தேவசேன என்பது அவள் பெயர். அவளே மணந்து ஸ்கந்தன் தேவசேன பதியானள். வடநாட்டுப் புராணக் கதைகளில் ஸ்கந்தன் கற்பு டினம் 48