பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரிந்து கொண்டவன்-தமிழ் நாட்டில் முருகன் களவு மன் வழக்குடையவர்களின் தெய்வமாக முதலில் இருந்தவன். எனவே இரு தெய்வங்களையும் ஒன்ருக்கும் பொழுது அவனுக்கு காதல் மணத்தால் பெற்ற ஒரு மனைவி ஏற். கெனவே இருந்தாள். வடநாட்டுப் புராணங்களிலுள்ள கதைகளில் ஏற்கெனவே கற்பு மணம் செய்விக்கப்பட்ட மனைவியொருத்தியும் இருந்தாள். புதுக் கதை களி ல் இருவரும் அவனின் மனைவியாகப்பட்டனர். கற்பு மணம் சிறப்புடையதாகக் கருதப்பட்ட காலத்தில் இக்கதைகள் இணைக்கப்பட்டிருப்பதால் தேவசேன முதல் மனைவியாகவும், வள்ளி இரண்டாவது மனைவியாகவும் ஆனர்கள். ஆனல் தமிழர் பண்பாட்டு வளர்ச்சியில் வள்ளிதான் முருகனுக்கு ஒரே மனைவி. மகளிர் அவனைக் களவில் தலைவனைக் கூட்டு விப்பவளுதவும், கற்பில் பிரிந்தவரைக் கூட்டுவிப்பவளுக வும், கருதி வழிப்பட்டனர். இக் குன்றை வணங்குவோர் பெறும் பயன்கள் எவை? ஆராக் காமமார் பொழிற்பாயல் வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி, முடியா நுகர்ச்சி முற்ருக் காதல் அடியோர் மைந்தர் அகலத் தகலா அலர்மென் மகன்றினன்னர்ப் புணர்ச்சி புலராமகிழ் மறப்பறியாது நல்கும் சிறப்பிற்றே தண்பரங் குன்று” (பாடல் 3, 40 -46) இக்குன்றமும், அதனையுடைய தெய்வமும் காதலர் பிரியாது வாழும் இன்ப வாழ்க்கையையளிக்கும். குறிஞ்சி நில ஒழுக்கமாகிய களவினையும், மருதநில ஒழுக்கமான கற்பினையும் முருகனது இரு திருமணங்கள் காட்டுகின்றன. மருத நிலத்தில் கற்பு மணத்தால் ஒரு மனைவியைக் காதலிக்காது மணந்து கொண்டவன், முருகனது களவு மணத்தைப் புகழ்ந்து, களவு மணத்தில் ஊடலும் பிரிதலும் 蟹参演