பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராயாத தமிழை அறியாத தலைவரே இக்குன்றின் பயன் அறியார். - துணைவரைப் பிரித்தவர்களைச் சிவன் கூட்டுவிப்பான் என்ற நம்பிக்கையை மற்ருேர் பாடலில் காணலாம். தலைவர் வந்து மீண்டும் பிரியாதிருக்கும் பொருட்டு மகளிர் முருகனைப் பாடும் பாட்டை அவன் விரும்புகிருன். அதனல் அவர்களைச் சேர்த்து வைப்பான் என்ற நம்பிக்கையில் அவர்கள் முருகனுக்கு வழிபாடு செய்வர். "கெழிஇக் கேளிர் சுற்ற நின்னை எழிஇப் பாடும் பாட்டமர்ந் தோயே" - (பாடல் 14, 23-24) பொருள் : தலைவியர் தம்மைப் பிரிந்து சென்ற தலைவர் விரைந்து வந்து புணர்ந்து பின் நீங்காமைப் பொருட்டு யாழிசை எழுப்பி உன்னைப் பரவிப் பாடுகின்ற பாட்டினை விரும்புவோனே. அவர்கள் பாட்டுக்கு மனமிரங்கி முருகன் அருளிய பின், தலைவர்கள் வந்து தலைவியரோடு சேர்ந்து வாழ்கிருர்கள். அப்பொழுது அவர்கள் முருகனை நினைப்பதில்லை. வையை யிலும் பரங்குன்றின் அருவியிலும் நீராடி விழாக் கொண்டாடு கிரு.ர்கள். துணை பிரிந்த மகளிரே தமது கணவரோடு சேர்த்து வைக்க முருகனை வழிபட்டனர் என்று தெரிகிறது. கோவில் சுவரில் எழுதப்பட்டிருந்த ஒவியங்கள் தெய்வங் களைப் பற்றிய ஓவியங்களாக இல்லை. - திருப்பரங்குன்ற மண்டபத்தில் இரண்டு ஒவியங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றைத் தம் காவியருக்குத் தலைவர் காட்டி விளக்குவதாக குன்றம் பூதஞர், பாடல் பதின்மூன்றில் கூறுகிரு.ர். 'இந்திரன் பூசை, இவள் அகலிகை, சென்ற கெளதமன் சினனுறக் கல்லுரு ஒன்றிய படியிதென் றுரைசெய்வோரும்' 'இரதி காமன் இவளிவன் என்ரு விரகியர் வினவ விடையிறுப்போரும்’ 51