பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவுப் புணர்ச்சி தமிழ் இலக்கிய மரபு. இதன் அதி தேவதைகளாக இரதியையும் காமனேயும் கூறுவது வடமொழி இலக்கிய மரபு. இவ்வோவியங்களில், களவுப் புணர்ச்சியை விரும்பும் மக்களுக்கு, அதன் கடவுளர்களாக வடமொழி இலக்கியங்களால் குறிப்பிடப்படும் இரதியும் காமனும் ஓவியங்களில் வரையப்பட்டுள்ளனர். அகலிகை கதைவும் வரையப்பட்டிருந்தது. வடமொழி மரபுப்படி, இந்திரனும் அகவிகையும் காதலர்கள். கெளதமன், அகலிகையின் தந்தையை அணுகி, தன் கல்வி மேன்மையைப் புலப்படுத்தி, அவளைத் தன் மனைவியாகப் பெற்ருன். இது பிரம மணம், காதலின்றி மணம் நிகழ்ந்ததால் ஏற்பட்ட பின் விண்துை இக்கதை கூறுகிறது. களவின்றி நடைபெறும் பிரம மனத்தால், குடும்பமே அழிவதை இக்காட்சி விளக்குகிறது. மேற்கூறிய யாவும், தொல்காப்பியர் கருத்துப்படியே தான் பரிபாடல்கள் பாடப்பட்டன என்பதும், கடவுள் வாழ்த்து காம வாழ்க்கைக்குத் தெளிவாக்குகிறது. திருமணமான கற்பொழுக்க மகளிர் முருகனை வழிபட்டு வரம் கேட்கிருர்கள். - 'கருவயிறுறுகெனக் கடம்படுவ்ோரும் செய்பொருள் வாய்க் கெனச் செவிசார்த்துவோரும் ஐயமரடுகென அருச்சிப்போரும்.” - (பாடல் 8. 106.108) தாம் கருவுற வேண்டுமெனவும், தம் கணவர்களுக்கு செல்வமும், போரில் வெற்றியும் அருள வேண்டுமெனவும் மகளிர் வேண்டுகின்றனர். சூரனை வென்றதால் போர்க் கடவுளாகக் கருதப்பட்ட முருகனிடம் போரில் வெற்றியை வேண்டி அரசரும் வீரரும் வழிபடுகின்றனர். முருகனுடைய போர்ப் படைகக் 荔爱